Menstruation : மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடும் வயிற்று வலியும், அதற்கான எளிய தீர்வும் – மருத்துவர் கூறுவது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Menstruation : மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடும் வயிற்று வலியும், அதற்கான எளிய தீர்வும் – மருத்துவர் கூறுவது என்ன?

Menstruation : மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடும் வயிற்று வலியும், அதற்கான எளிய தீர்வும் – மருத்துவர் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 27, 2025 03:34 PM IST

Menstruation : மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடும் வயிற்று வலியும், அதற்கான எளிய தீர்வுகளும் என்ன?

Menstruation : மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடும் வயிற்று வலியும், அதற்கான எளிய தீர்வும் – மருத்துவர் கூறுவது என்ன?
Menstruation : மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கடும் வயிற்று வலியும், அதற்கான எளிய தீர்வும் – மருத்துவர் கூறுவது என்ன?

மாதவிடாய்

12 வயது முதல் பெண்கள் பூப்படையத் துவங்குகிறார்கள். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கருப்பையில் தோன்றும் கருமுட்டை, உடைந்து வெளியேறுகிறது. அது பெண்ணின் பிறப்புறப்பு வழியாக உதிரமாக வெருகிறது. மாதவிடாய் என்பது பூப்பெய்திய அனைத்து பெண்களுக்கும் வழக்கமாக வரும் ஒன்று. இது ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. கர்ப்பத்துக்கு பெண்களின் உடலை தயார்படுத்துவதில் மாதவிடாய் என்பது முக்கியமானது.

இது எப்படி ஏற்படுகிறது

பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லையென்றால், கருமுட்டை உரைந்து மாதவிடாய் உதிரமாக வெளியேறுகிறது. இதுபோல் வெளியேறும்போது, அதில் ரத்தம் மற்றும் கருப்பை திசுக்கள் கலந்திருக்கும்.

எத்தனை நாட்கள் இருக்கும்?

மாதவிடாய் என்பது பொதுவாக பெண்களுக்கு 2 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இதில் 1 முதல் 5 ஸ்பூன வரையிலான ரத்தத்தை பெண்கள் ஒரு நாளில் இழக்கிறார்கள்.

எத்தனை நாட்களில் வரும்?

மாதவிடாய் என்பது 21 முதல் 35 நாட்களில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும். 12 வயது முதல் ஏற்படும் மாதவிடாய் 10 முதல் 15 வயதுக்குள் பெண்களுக்கு ஏற்படுகிறது. 40 வயதுகளின் மத்தியில் இருந்து 50 வயதுகளின் மத்தியில் வரை அது நின்றுவிடுகிறது. அது நிற்பதற்கு முன்னர் படிப்படியாக குறைகிறது.

மாதவிடாயின்போது பெண்களுக்கு வலி எப்படி ஏற்படும்?

பின்புறம் அல்லது அடிவயிற்றில் வலி

தலைவலி

மன மாற்றம்

சோர்வு

கோவம்

கண்ணீர்

முகப்பரு மற்றும் சருமத்தில் மாற்றம்

ஆகியவை ஏற்படுகிறது.

கருப்பை சார்ந்த நோய்கள் மற்றும் மாதாந்திர மாதவிடாய், கருப்பை கட்டிகள் சூதக நோய்கள் எனப்படும். இதற்கான தீர்வுகள் என்னவென்று பார்க்கலாம்.

டிஸ்மெனோரியா என்பது, மாதவிடாயின்போது ஏற்படும் வலியாகும். இதனால் பெண்கள் அவதிப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கான எளிய வீட்டிலேயே செய்யக்கூடிய தீர்வு உள்ளது. வலி நிறைந்த மாவிடாயை எதிர்கொள்ள 6 உப்புகள் உதவும். அதை என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

சோற்று உப்பு – அரை ஸ்பூன்

இந்துப்பு – அரை ஸ்பூன்

கல் உப்பு – அரை ஸ்பூன்

வளையல் உப்பு – அரை ஸ்பூன்

சவுட்டுப்பு – அரை ஸ்பூன்

வெடியுப்பு -ஸ்பூன்

செய்முறை

சோற்றுப்பு, கல் உப்பு, இந்துப்பு, வளையல் உப்பு, சவுட்டுப்பு, வெடியுப்பு என ஆறு உப்புகளையும் தனித்தனியாகப் பொடித்துக்கொள்ளவேண்டும். இந்த 6 உப்புகளையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதில் ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம் எடுத்து பழைய சாதத்தின் நீராகாரத்தில் கலந்து காலை ஒரு வேளை மட்டுமே சாப்பிடவேண்டும்.

மேலும் இதை அனைத்து சூதக நோய்களுக்கும், ஒரு மண்டலம் மட்டும் சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிட்டு வந்தால் இந்த கருப்பை நோய்கள் அனைத்தும் காணாமல் போகும் என்று மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.