Menstruation : எந்த வீட்டு வைத்தியமும் உதவவில்லையா? இத செய்ங்க மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் வந்துவிடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Menstruation : எந்த வீட்டு வைத்தியமும் உதவவில்லையா? இத செய்ங்க மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் வந்துவிடும்!

Menstruation : எந்த வீட்டு வைத்தியமும் உதவவில்லையா? இத செய்ங்க மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் வந்துவிடும்!

Priyadarshini R HT Tamil
Published Jul 29, 2024 12:19 PM IST

Menstruation : எந்த வீட்டு வைத்தியமும் உதவவில்லையெனில் முதலில் இதை செய்யவேண்டும். மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் வந்துவிடும். மாதவிடாய் சிரமங்களும் குறையும்.

Menstruation : எந்த வீட்டு வைத்தியமும் உதவவில்லையா? இத செய்ங்க மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் வந்துவிடும்!
Menstruation : எந்த வீட்டு வைத்தியமும் உதவவில்லையா? இத செய்ங்க மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் வந்துவிடும்!

நீண்ட மாதமாக உங்களுக்கு மாதவிடாய் வரவில்லையா? எந்த வீட்டுத் தீர்வுகளும் உதவவில்லையா? எனில் இந்த வீட்டு தீர்வை முயற்சி செய்து பாருங்கள். மாதவிடாய் கட்டாயம் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்

புதினா – 3 கைப்பிடியளவு

எலுமிச்சை சாறு – 20 மில்லி லிட்டர்

உப்பு – சிறிதளவு

அல்லது

நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்

இந்த புதினாவில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்துக்கள், உங்கள் ப்ரோஸ்ட்ரோகேலன் சுரப்பை அதிகப்படுத்தி, கருப்பை சுருங்கி விரியக்கூடிய தன்மையை அதிகரிக்க புதினா கீரையால் முடியும்.

எனவே இது நாள்பட்ட மாதவிடாய் கோளாறுகளையும் சரிசெய்யும். நீங்கள் வழக்கமான மாதவிடாய் நாட்களிலும் இதை முயற்சி செய்யலாம். உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.

அத்துடன் உங்களுக்கு மாதவிடாயின்போது அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு இரண்டையும் சரிசெய்யும். மாதவிடாய் சுழற்சியையும் முறைப்படுத்தும்.

செய்முறை

புதினாவை அரைத்து அதில் எலுமிச்சை சாறை கலந்து அதனுடன் உப்பு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஒரு ஸ்மூத்தி போல் பருகவேண்டும். இதனால் உங்களின் மாதவிடாய் பிரச்னைகள் சரியாவதுடன், உங்கள் உடலுக்கும் சிறந்தது.

புதினாவில் உள்ள சத்துக்கள்

புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய அனைத்திலும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் உள்ளது.

இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

புதினா இலைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. புரதம் மற்றும் கொழுப்புச்சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் அதற்கு புதினா இலைகளை பயன்படுத்தலாம்.

புதினாவின் நன்மைகள்

செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது.

குடலில் ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது.

சுவாச பிரச்னைகளை மேம்படுத்துகிறது.

பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் வலியை போக்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

காலையில் எழுந்தவுடன் ஏற்படும் உடல் உபாதைகளைப் போக்குகிறது.

அலர்ஜியைப்போக்குகிறது.

ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

பக்கவிளைவுகள்

வாயுத்தொல்லை உள்ள நபர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இது நுகர்வுக்கு ஏற்றதுதான் என்றாலும் அளவுக்கு மிஞ்சக்கூடாது.

அல்சர் உள்ளவர்கள் இதை அதிகம் எடுக்கும்போது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மெந்தால் எண்ணெய் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே குழந்தைகள் கையில் படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.