தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
May 19, 2024 12:00 PM IST

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்தாக நாம் வேண்டாம் என்று கீழே ஊற்றும் வெறும் சோறு வடித்த கஞ்சி மட்டும் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!
Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

சிறு வயதிலேயே பூப்பெய்தும் பெண் குழந்தைகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் நன்றாக படிக்க முடியாமலும், பிரசவத்திற்கு பின்னர் ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் அவதிப்படுகிறார்கள். 

அவர்களால் நன்றாக வேலை செய்யமுடியாது. சிறிது நேரம் நின்றாலே இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். முதுகுத்தண்டிலும் வலி அதிகமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

சாதம் வடித்த கஞ்சி – ஒரு டம்ளர் (இளஞ்சூடாக இருக்கவேண்டும்)

சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

கருப்பட்டி – அரை ஸ்பூன்

(கருப்பட்டியில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் பெண்களின் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கும். கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். மாதவிடாய் மற்றும் மாதவிடாய் அல்லாத காலங்களில் ஏற்படும் இடுப்பு வலியைப் போக்கும்)

அல்லது

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு டம்ளர் இளஞ்சூடான சாதம் வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் கருப்பட்டி அல்லது தேன், உப்பு, சீரகத்தூள் சேர்த்து கலந்து பருகவேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. ஆனால் காலையில் பொதுவாக சாதத்தை நாம் வடிக்க மாட்டோம். அதனால், எப்போது சாதம் வடிக்கும்போதும் அந்த கஞ்சியை வீணாக்காமல் இதுபோல் செய்து பருகிவர உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும்.

இடுப்பு வலி, மாதவிடாய் வேதனை என அனைத்தும் குணமாகிவிடும். இரண்டு வாரங்களில் பலன் தரும். இதை தொடர்ந்து ஒரு மாதம் தொடர்ந்து பருகினால் உங்களுக்கு மிகவும் நல்லது. இதை எப்போதுமே பருகலாம். எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

அரிசி வடித்த கஞ்சியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அது நமது எலும்புகளுக்கு உறுதியைத்தரும். குறிப்பாக பெண்களின் கருப்பைக்கு நல்ல வலு சேர்க்கும். 

பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் கருப்பையில் அதிகப்படியான உஷ்ணம் ஏற்படும். இதனால்தான் மாதவிடாய் காலங்களில் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படுகிறது.

இந்த தண்ணீரை தொடர்ந்து பருகிவந்தால் அவை ஏற்படாது. சாதம் வடித்த கஞ்சி உங்கள் கருப்பையை குளுமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. 

இதனால் உங்களுக்கு சோர்வு நீங்கி, நீங்கள் சுறுசுறுப்புடன் எப்போதுபோல் வேலை செய்யலாம். மேலும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ளது.

எனவே சாதத்தை குக்கரில் வைக்காமல் வடித்து அதன் கஞ்சியையும் சேர்த்து பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. ஆனால் அதில் எவ்வித சத்துக்களும் கிடையாது. உடலுக்கு நல்லதும் கிடையாது. 

இந்த கஞ்சியை மாடுகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம். இதனால் மாடுகளுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் இந்த கஞ்சியை பயன்படுத்தி பலன் பெறலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்