மாதவிடாய் வலிகள் : மாதவிடாய் கால வலியால் அவதியா? அந்த நேரத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எவை? – மருத்துவர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாதவிடாய் வலிகள் : மாதவிடாய் கால வலியால் அவதியா? அந்த நேரத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எவை? – மருத்துவர் விளக்கம்!

மாதவிடாய் வலிகள் : மாதவிடாய் கால வலியால் அவதியா? அந்த நேரத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எவை? – மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Published Feb 26, 2025 07:00 AM IST

மாதவிடாய் வலிகள் : மாதவிடாய் வலிகள் டிஸ்மெனோரா என்று அழைக்கப்படுகிறது. அடிவயிற்றில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளைக் குறிக்கும். இந்த நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய பழங்கள் குறித்து மகளரியல் மருத்துவர் குர்பிரீத் பத்ரா தெரிவித்துள்ள தகவல்கள் என்னவென்று பார்க்கலாமா?

மாதவிடாய் வலிகள் : மாதவிடாய் கால வலியால் அவதியா? அந்த நேரத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எவை? – மருத்துவர் விளக்கம்!
மாதவிடாய் வலிகள் : மாதவிடாய் கால வலியால் அவதியா? அந்த நேரத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எவை? – மருத்துவர் விளக்கம்!

இதுகுறித்து அவர் கூறியதாவது

மாதவிடாய் வலிகள் சிலருக்கு அதிகம் இருக்கும். சிலருக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் ஓரிரு நாட்கள் முன்னரே வலிகள் துவங்கும். சிலருக்கு மாதவிடாய் ஏற்பட்டு ஓரிரு நாட்கள் முடிந்தும் இருக்கும். இந்த நேரத்தில் பெண்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களாக ஊட்டச்சத்துக்கள் என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் 2020ம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த பழங்களில் தினமும் சில துண்டுகளை சாப்பிடலாம். அதனால் அவர்களின் மாதவிடாய் வலிகளுக்கு நிவாரணம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள போரான் என்ற மினரல், மாதவிடாய் வழிகளைக் குறைக்கிறது. கல்லூரி செல்லும் பெண்கள் மத்தியில் 2015ம் ஆண்டு நடந்த ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. காம்ப்ளிமென்டரி தெரபிகள் இன் கிளினிக்கல் ப்ராக்டிஸ் என்ற ஆராய்ச்சி இதழில் ஆய்வுக்கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளது. அது கருப்பை சதைகளை அமைதிப்படுத்துகிறது. வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. மன அழுத்தைக் குறைக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஒரு வாழைப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்

இந்தப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைக்கும் எண்சைம் ஆகும். தசைகளை அமைதிப்படுத்துகிறது. வலியைக் குறைக்கிறது. எனவே ஒரு கப் அன்னாசி பழத்தை, சாறாகவோ அல்லது பழமாகவே சாப்பிடவேண்டும்.

தர்ப்பூசணி

நீர்ச்சத்துக்கள் நிறைந்தது. இதில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு வயிறு உப்புசத்தைக் குறைக்கும். தசைகளில் உள்ள இறுக்கத்தைப்போக்கும். மெக்னீசியச்சத்துக்கள் வலிகளைப் போக்க வல்லது. எனவே மாதவிடாய் காலத்தில் தர்ப்பூசணிப் பழமோ அல்லது சாறோ பருகவேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழங்களில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு தசைகளில் ஏற்படும் வலிகளைப்போக்கும். எனவே ஆரஞ்சுகளையும் தினமும் பழமாகவோ அல்லது சாறாகவோ பருகவேண்டும்.

பப்பாளி

இதில் பப்பைன் உள்ளது. இது தசைகளுக்கு வலுகொடுக்கும் ஒரு எண்சைம் ஆகும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் உங்கள் உடலில் ஹார்மோன்களின சமநிலையை மேம்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலங்களில் பப்பாளிப்பழங்களை சாப்பிடுவதும் நல்லது.

பெரிகள்

ப்ளு பெரிகள், ஸ்ட்ராபெரிகள் மற்றும் ராஷ் பெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இந்த பெரிகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளைக் குறைக்கும். மூன்றையும் கலந்து தினமும் ஒரு கப் சாப்பிடுவது நல்லது.

அவகேடோ

இந்தப்பழமும் மாதவிடாய் கால வலிகளுக்கு நிவாரணம் தரக்கூடியது. இதில் ஆரோக்கிய கொழுப்புகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. இது தசைகளை அமைதிப்படுத்தி, வயிறு உப்புசம் மற்றும் வலிகளைப் போக்கும். தினமும் அவகோடா ஒரு அரைப்பழமாவது மாதவிடாய் காலங்களில் சாப்பிடவேண்டும்.

ஆப்பிள்

நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. செரிமானத்தை அதிகரிக்கிறது. வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள குயிர்செடின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. அது மாதவிடாய் வலிகளைக் குறைக்க உதவுகிறது. எனவே மாதவிடாய் காலங்களில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.

இவையனைத்தையும் சேர்த்து சாலட்கள் மற்றும் ஸ்மூத்திகளாக சாப்பிடலாம். தண்ணீரில் ஊறவைத்து நீர்ச்சத்து நிறைந்த பானமாகவும் சாப்பிடலாம்.

பக்கவிளைவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப பழங்களையும் அளவாகத்தான் சாப்பிடவேண்டும். அல்சர், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு போன்ற ஆசிட் நிறைந்த பழங்கள் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். தர்ப்பூசணியில் உள்ள அதிகப்படியான தண்ணீர் சத்துக்கள், வயிற்றில் உள்ள ஆசிட்களை நீர்க்கச்செய்து, செரிமானத்தைக் குறைத்து, வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதிகம் அன்னாசிப்பழங்கள் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே அளவாக எடுப்பது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.