Men Health : 30 வயது நிறைந்த ஆணா? விந்தணுக்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும் - மருத்துவர் கூறுவது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Men Health : 30 வயது நிறைந்த ஆணா? விந்தணுக்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும் - மருத்துவர் கூறுவது என்ன?

Men Health : 30 வயது நிறைந்த ஆணா? விந்தணுக்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும் - மருத்துவர் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Feb 01, 2025 07:00 AM IST

The ultimate male health guide : உங்கள் உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்து, உங்களின் ஆற்றல், ஆண்டை, செயல்திறன் என அனைத்தையும் அதிகரித்துக்கொள்ளுங்கள். இது உங்களின் ஃபிட்னஸை மேம்படுத்தி, நல்ல பலனைத் தரும் என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

Men Health : 30 வயது நிறைந்த ஆணா? விந்தணுக்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும் - மருத்துவர் கூறுவது என்ன?
Men Health : 30 வயது நிறைந்த ஆணா? விந்தணுக்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும் - மருத்துவர் கூறுவது என்ன? (File Photo)

வாழ்க்கை முறை மாற்றம், ஊட்டச்சத்து உணவுகள், இயற்கை நிவாரணிகள், சப்ளிமென்ட்கள் என ஒருவர் தங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஒட்டுமொத்த கருவுறும் திறனையும் அதிகரிக்கலாம். எனினும் உணவுகள் மட்டுமே உதவாது. மருத்துவர்களின் அறிவுரையும் தேவை. அது ஆண்களின் கருவுறும் திறன் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 

டெஸ்டோஸ்டிரோன் ஊசிகள் மற்றும் மற்ற ஸ்டிராய்ட் ஊசிகள் என உங்கள் ஸ்பெர்ம் உற்பத்தியை பாதிக்கும். அதிகம் காபி பருகினாலும் விந்தணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், டாக்டர் சுதன்சு ராய் என்ற விளையாட்டு ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், ஆண்கள் தங்களின் விந்தணுக்களை எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரித்துக்கொள்ள 30 வயதுக்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார். 

அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் 

மெக்னீசியம் 

மெக்னீசியச்சத்துக்கள் தசைகள் மற்றும் நரம்புகள் இயங்கவும், ஆற்றல் உற்பத்தி, மனஅழுத்த மேலாண்மை, உறக்கத்தின் தரம் அதிகரிக்க மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 

சிங்க் 

இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவுகிறது. உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. உங்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்களில் தசைகள் மீளவும் வழிவகுத்து உங்கள் உடலை வலுப்படுத்துகிறது. 

வைட்டமின் டி3 மற்றும் கே2 

டி 3 - வலுவான எலும்புகளுக்கு அவசியம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும், குறைந்தபட்ச டெஸ்டோஸ்டிரோன் அளவை பராமரிக்கவும் தேவை. 

கே 2 - இது எலும்புகள் வலுப்பெறவும், இதய ஆரோக்கியத்துக்கும் தேவையான கால்சியத்தை உங்கள் உடல் நன்றாக உறிஞ்ச உதவுகிறது. 

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் 

இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. மூளையின் திறனை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த செயலையும் மேம்படுத்துகிறது. இது நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது. 

ஆண்களுக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தைவிட குடும்ப பொறுப்புக்கள் முக்கியமானதாகப்படும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்துக்கு அதிக முயற்சிகள் தேவையில்லை. சரிசமமான வாழ்க்கை முறை இருந்தாலே போதும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் உண்பதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இதனால் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும், உடலின் திறனும் மேம்பட்டு நீண்ட நாள் ஆரோக்கியம் கிடைக்கும்.

பற்றாக்குறையின் அறிகுறிகளைக் கண்டுபிடித்து, அதற்கு தேவையான சப்ளிமென்ட்களை எடுத்தாலே போதும், ஆண்களின் நலன் அதிகரிக்கும். மேலும் அவர்கள் ஒரு திருப்திகரமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும். எனவே எப்போதும் ஒரு புதிய சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, அது உங்களுக்கு உகந்ததா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சரியான அளவு எடுக்கவேண்டும். நச்சுக்களை தவிர்க்கவேண்டும். தனிபட்ட உடல் நிலை பிரச்னைகளை முன்னிருத்தி இவற்றை எடுக்கவேண்டும்.

உங்கள் மருத்துவர் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விளக்குவார்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் சப்ளிமென்ட்கள் குறித்தும், குறிப்பாக நீங்கள் அதிகளவை நீண்ட காலம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் விளக்குவார்கள். அதனால் வரும் பக்கவிளைவுகளையும் குறிப்பிடுவார்கள். எனவே இதை முழுமையாக தெரிந்துகொண்டு, நீங்கள் அதை எடுக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.