நினைவாற்றல் டெக்னிக் : நீங்கள் எதையும் எளிதில் மறந்துவிடும் நபரா? நினைவில்கொள்ள உதவும் ஜப்பானிய டெக்னிக்குகளைப் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நினைவாற்றல் டெக்னிக் : நீங்கள் எதையும் எளிதில் மறந்துவிடும் நபரா? நினைவில்கொள்ள உதவும் ஜப்பானிய டெக்னிக்குகளைப் பாருங்க!

நினைவாற்றல் டெக்னிக் : நீங்கள் எதையும் எளிதில் மறந்துவிடும் நபரா? நினைவில்கொள்ள உதவும் ஜப்பானிய டெக்னிக்குகளைப் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Published May 11, 2025 07:00 AM IST

நீங்கள் எதையும் எளிதில் மறக்கக்கூடிய நபர் என்றால், அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள உதவும் ஜப்பானிய டெக்னிக்குகளைப் பாருங்கள்.

நினைவாற்றல் டெக்னிக் : நீங்கள் எதையும் எளிதில் மறந்துவிடும் நபரா? நினைவில்கொள்ள உதவும் ஜப்பானிய டெக்னிக்குகளைப் பாருங்க!
நினைவாற்றல் டெக்னிக் : நீங்கள் எதையும் எளிதில் மறந்துவிடும் நபரா? நினைவில்கொள்ள உதவும் ஜப்பானிய டெக்னிக்குகளைப் பாருங்க!

கன்ஷட்சூ

மடத்துறவிகள் இந்த டெக்னிக்குகளை பின்பற்றினார்கள், நீங்கள் எதையும் உற்று கவனிக்க உதவும் அமைதியான வழி. இது உங்கள் மூளையை சிறிய விஷயங்களைக் கூட குறித்து வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த டெக்னிக்கை ஜென் ஆர்டிஸ்ட்கள் மற்றும் காலிகிராஃபர்கள் பயன்படுத்தினார்கள். இது ஒவ்வொரு நாளில் நடந்த அனைத்தையும், நினைவில்கொள்ளச் செய்கிறது.

ஷிசா கண்கோ

ஜப்பானில், ரயில் வண்டிகளை இயக்குபவர்கள், அடிக்கடி சிக்னல்களை குறிப்பிட்டுக்காட்ட கத்துவார்கள். இது ஷிசா கண்கோ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை கவனத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடல் மற்றும் குரல் இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. இது மூளையை குறிப்பிட்ட வேலையை நினைவில்கொள்ளச் செய்கிறது.

நாய்க்கன்

காலம் உருண்டோடும்போது நினைவுகளும் அழிந்துவிடும் என்ற பெரும்பாலானோர் நம்புகிறார்கள். இது ஒரு சுய பிரதிபலிப்பு தெரபியாகும். இதை அமைதியான சூழலில் பழகவேண்டும். இது கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர உதவும். அதற்கு மூன்று கேள்விகள் கேட்கவேண்டும். நீங்கள் கொடுத்தது, பெற்றது மற்றும் பிரச்னைகளை ஏற்படுத்தியது என்ற மூன்று கேள்விகளைக் கேட்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்யவேண்டும்.

சிசோக்கு

உயர்ந்த இலக்குகள் நினைவாற்றல் பயிற்சிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், சிசோக்கு என்ற மனநிறைவு முறை வேறு விதமாக வாதிடுகிறது. மனம் எப்போது துரத்துவதை நிறுத்துகிறதோ அப்போது, அந்த கணத்தில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும் எனக் கூறுகிறது.

கியோ

இது ஒரு ஜென் பழக்கமாகும். கியோ என்றால், கவனத்துடன் நீங்கள் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி, அது ஒரு வேலையாகக் கூட இருக்கலாம். அது உங்களின் மூளையின் நினைவாற்றலை மேம்படுத்தும் என்று கூறுப்படுகிறது.

கோடோடாமா

கோடோடாமா என்பது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆன்மா உண்டு என்று நம்புகிறது. இது ஆன்மீக வழியைப் போல் தோன்றினாலும், இதற்கு பின் ஒரு அறிவியல் உள்ளது. நீங்கள் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருக்கும்போது, அது உங்கள் நினைவில் அதிகம் நிற்கிறது. இது பாடங்களை நீங்கள் மனனம் செய்யும் முறை ஆகும்.

உகேடோமா

ஜப்பானின் டொஹோக்கு பகுதியில் உள்ள பழமையான முறைக்கு உகேடேமா என்று பொருள். இதற்கு நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று பொருள். இதை ஆன்மீக வழியாக சிலர் பார்ப்பார்கள். ஆனால் இது உங்கள் மனதை திருப்திப்படுத்தும் முறையாகும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.