Sleepless Nights: தூக்கத்துக்கு உதவும் மெலடோனின் - அது சுரக்க மருத்துவர்கள் கூறுவது என்ன?
தூக்கத்துக்கு உதவும் மெலடோனின் சுரப்பி குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
இருட்டில் உடலால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன், மெலடோனின். இது நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது.
மன அழுத்தம் நம்மை தூங்கவிடாமல் தடுக்கிறது. அதே நேரத்தில் போதிய தூக்கமின்மை மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது. எனவே, போதிய தூக்கமின்மை, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நாட்பட்ட நிலைமைகளின் அபாயத்தை மறைமுகமாக அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மெலடோனின் என்பது உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்யும் ஹார்மோன் என்றாலும், மெலடோனின் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்.
இதுகுறித்து டாக்டர் யோங்சியாட் வோங் கூறுகையில், "அவ்வப்போது தூக்கமின்மை அதிகரிக்க மன அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். தூக்கத்தை வரவைக்கும் மெலடோனின் சுரப்பி, சுமார் 80% இரவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏனெனில் இருள் அதன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இளமையில் மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனால், வயதாகும்போது குறைகிறது. 30 வயதிற்குப் பிறகு, ஒரு குழந்தையாக நாம் உற்பத்தி செய்த மெலடோனின் பாதிக்கும் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. வயது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் தூக்கப் பிரச்னைகளின் மாற்றத்தைப் பாதிக்கின்றன.
- புளிப்பு செர்ரி, பாதாம் மற்றும் திராட்சை போன்ற சில உணவுகளிலும் சிறிய அளவு மெலடோனின் உள்ளது.
- தூக்க முறைகளில் சமநிலையை மீட்டெடுக்க உதவும் உணவுகளை உண்ணவேண்டும்.
- தூக்கமின்மையினை சரிசெய்ய மெலடோனின் அடிப்படையிலான மருந்துகள் உருவெடுத்துள்ளன.
- அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்படி கவனமாகவும் மிதமாகவும் பயன்படுத்தும்போது மெலடோனின் மருந்துகள் திறமையான தூக்க உதவியாக இருக்கும்.
- தூக்கமின்மையை எதிர்கொள்ளும் எவருக்கும் 2 மி.கி மெலடோனின் உகந்த அளவாகும். சரியான நேரத்தில் அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை குறைவாகப் பயன்படுத்துங்கள்’’ என மருத்துவ நிபுணர் யோங்சியாட் வோங் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்