Tamil News  /  Lifestyle  /  Medical Research Governments Should Follow Waste Water Testing To Detect The Spread Of Disease At The Beginning

Medical Research : நோய் பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிய கழிவு நீர் பரிசோதனையை அரசுகள் பின்பற்ற வேண்டும்!

Priyadarshini R HT Tamil
Jan 15, 2024 02:30 PM IST

Medical Research : நோய் பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிய கழிவு நீர் பரிசோதனையை அரசுகள் பின்பற்ற வேண்டும்!

Medical Research : நோய் பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிய கழிவு நீர் பரிசோதனையை அரசுகள் பின்பற்ற வேண்டும்!
Medical Research : நோய் பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிய கழிவு நீர் பரிசோதனையை அரசுகள் பின்பற்ற வேண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

போலியோ வைரஸை சமூகத்தில் உள்ள கழிவுநீரை பரிசோதித்து, அதனை ஆரம்பத்திலேயே மருத்துவ நிபுணர்களால் கண்டறிய முடிந்தது வரலாறு.

தென்ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை சமூகத்தில் கண்டறிவதற்கு 10 நாட்கள் முன்னரே கழிவு நீர் பரிசோதனை மூலம் ஆய்வாளர்களால் கண்டறிய முடிந்தது.

கொரோனா வைரஸ் சிறுநீர், மலத்தில் வெளியாவதால் அதை முன்கூட்டியே கண்டறிய சிரமங்கள் இல்லை.

இந்தியாவிலும், பெங்களூருவில், Tata Institute for Genetics and Society ஆய்வாளர்கள் (TIGS) ஓசையின்றி பரவிய ஒமிக்ரான் XBB.1.16 அலையை முன்கூட்டியே எளிதில் கண்டறிந்தனர்.

சமீபத்தில் நவம்பர் 2023 - Science Translational Medicine ஆய்வுப் பத்திரிக்கையில் கழிவுநீர் பரிசோதனை மூலம் டெங்கு,மலேரியா, ஜிக்கா வைரஸ், டைபாய்ட் போன்ற நோய்களையும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

நீர் மூலம் பரவும் டைபாய்ட், காலரா, ரோட்டா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கழிவுநீர் பரிசோதனையில் எளிதில் கண்டறிய முடியும் என இருந்தாலும், ஃபுளூ வைரஸ் பாதிப்பையும் எளிதில் முன்கூட்டியே கண்டறிய முடியும்.

மேலும் கண்டறிய முடியும் நோய்களின் பாதிப்பு அதிகரித்து அல்லது குறைந்து வருவதையும் எளிதில் கண்டறிந்து தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை அரசு முன்கூட்டியே எடுக்கவும் முடியும்.

RNA டெங்கு வைரஸ் பாதிப்பையும் கழிவுநீர் பரிசோதனையில் கண்டறிய முடியும் என்றாலும், அது சற்று சவாலாக இருக்கும்.

டெங்குவை பொறுத்தமட்டில் கொசுக்களின் அடர்த்தி, முட்டை அல்லது லார்வாக்களின் இருப்பையும் கண்டறிதல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும்.

கழிவுநீர் பரிசோதனையின் மூலம் வைரஸ்களில் ஏற்படும் உறுமாற்றத்தையும் மக்களை வீடு, வீடாக சென்று பரிசோதிக்காமலே கண்டறிய முடியும்.

மேலும், கிருமிகொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற கிருமிகளையும், பூச்சிக்கொல்லி, நெகிழித்துகள்களையும் (Microplastics) கழிவுநீரிலிருந்து வடிகட்டி Spectroscopy மூலம் எளிதில் கண்டறிய முடியும்.

மக்களிடையே போதை பழக்கத்தை உண்டாக்கும் வேதிப்பொருட்களையும் கழிவுநீர் பரிசோதனையில் கண்டறிய முடியும்.

இத்தனை சிறப்பம்சங்கள் "கழிவுநீர்" பரிசோதனைகளில் இருப்பதால், அரசு அதை பயன்படுத்தி, பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் நலனை உறுதிபடுத்த முடியும் என்பதால், அரசு மேற்சொன்ன விசயங்களை கருத்தில்கொண்டு கழிவுநீர் பரிசோதனைகளை இந்தியா அல்லது தமிழகம் முழுக்க மேற்கொள்ள முன்வர வேண்டும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்