Elaneer Payasam: இந்த நாள் இனிய நாளாக இளநீர் பாயாசம் செய்து பாருங்க மக்களே!
இளநீர் பாயாசத்தை பிரிட்ஜில் வைத்து நன்றாக ஜில் ஆன பிறகு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். ஆனால் இந்த பாலை செய்து 4 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் கெட்டு விடும்.
உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை இனிப்பான உணவு செய்வது வழக்கமா. அப்படி இருந்தால் இன்று இந்த இளநீர் பாயாசம் செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
இளநீர் வழுக்கை
பால்
ஏலக்காய்
தேங்காய் பால்
கண்டென்ஸ்ட் மில்க்
முந்திரி பாதாம்
செய்முறை
அரை லிட்டர் பால் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பால் கோவாவிற்கு முந்தைய ஸ்டேஜிற்கு வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். ஒரு 4 இளநீரின் வழக்கையை நன்றாக கொத்தி எடுத்து கொள்ள வேண்டும். அரை லிட்டர் பால் 100 மில்லி லிட்டராக குறையும் போது அதில் 100 கிராம் சர்க்கரையை சேர்க்க வேண்டும். அரை நன்றாக கிளற வேண்டும்.
பால் சர்க்கரை சேர்ந்து 80 கிராம் வரும் வரை கிளற வேண்டும். இப்போது அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு ரபடி என்று பெயர். இந்த ரபடி மீது 3 ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க்கை சேர்த்து கொள்ள வேண்டும். இதை நன்றாக கிளற வேண்டும். இதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி மற்றும் ஒரு கப் திக்கான தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இதையடுத்து ஒரு கிண்ணத்தில் கொத்தி வைத்த இளநீரை சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மேல் நாம் ஏற்கனவே கலந்து வைத்த ரபடி, தேங்காய் பால் கன்டென்ஸ்ட் மில்கை கலவையை ஒரு ஜல்லடையில் சேர்த்து வடி கட்டி சேர்க்க வேண்டும். இதில் நாம் விரும்பினால் மேல் பகுதியில் முந்திரி பாதாம் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். இனிப்பு குறைவாக இருந்தால் அதில் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கிளற வேண்டும்.
இதை பிரிட்ஜில் வைத்து நன்றாக ஜில் ஆன பிறகு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். ஆனால் இந்த பாலை செய்து 4 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் கெட்டு விடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்