தோரணங்கள் கட்டுவதற்கு மட்டும் பயன்படுவது அல்ல மாவிலைகள்; அதில் உள்ள நற்குணங்களைப் பாருங்கள்!
தோரணங்கள் கட்டுவதற்கு மட்டும் பயன்படுவது அல்ல மாவிலைகள், அதில் உள்ள நற்குணங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

மாவிலையில் உள்ள ஆரோக்கிய நற்குணங்களை தெரிந்துகொண்டீர்கள் என்றால் அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள். அவை என்னவென்று பாருங்கள். மாங்காய் மற்றும் மாம்பழத்தைதான் நாம் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால் மாவிலைகளை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. அவற்றில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் பி, சி மற்றும் ஏ ஆகியவை உள்ளது. மேலும் இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பயோஆக்டிவ் உட்பொருட்கள் மாவிலைகளை அதன் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. மாவிலையில் நன்மைகளை தெரிந்துகொண்டு அதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
நீரிழிவு நோய் மேலாண்மை
மாவிலைகளுக்கு இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உள்ளது. இதை தண்ணீரில் ஊறவைத்து பருகும்போதோ அல்லது கொதிக்க வைத்து பருகும்போதோ அது பாரம்பரிய தீர்வாக அமைகிறது. இது ஆரம்ப கட்டத்தில் உள்ள நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
மாவிலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ப்ளாவனாய்ட்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மைகொண்டது. இது ரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் காக்கிறது.