Massage Benefits : இப்டி ஒரு மசாஜ் பண்ணினா எப்டி இருக்கும் என்று எண்ணத்தோன்றும்! அத்தனை நன்மைகளை தரும் மசாஜ்!
Benefits of Body Massage : ஒரு பரபரப்பான நாளில் மசாஜ் உங்களை எப்படி மசாஜ் குணப்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பல்வேறு வகையான மசாஜ்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் என்ன தெரியுமா?
ஒரு பரபரப்பான நாளில் மசாஜ் உங்களை எப்படி மசாஜ் குணப்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பல்வேறு வகையான மசாஜ்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் என்ன தெரியுமா?
மன அழுத்தத்தை போக்கி, மன அமைதியைத் தரும்
மசாஜின் முக்கிய நன்மையே அது நமது மனஅழுத்தத்தை போக்குவதுதான். உங்கள் உடலில் மசாஜ் செய்யும்போது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் என்ற ஹார்மோனின் அளவு குறையும். இது உங்களுக்கு மனஅழுத்தத்தை போக்க உதவும். மனதை அமைதிப்படுத்தும்.
மலச்சிக்கலை போக்குகிறது
வயிற்றுப்பகுதியில் மசாஜ் செய்யப்படும்போது, உங்கள் மலச்சிக்கல் மற்றும் வேறு ஏதேனும் செரிமானப் பிரச்னைகள் இருந்தால் அவற்றை சரிசெய்கிறது. சிலருக்கு அறுவைசிகிச்சைக்குப்பின்னர், மலச்சிக்கல் ஏற்படும். இதை சரிசெய்ய வயிற்றுப்பகுதியில் மசாஜ் செய்துகொள்வது நல்ல பலனைத்தரும்.
டென்சனால் ஏற்படும் தலைவலியைப் போக்கும்
டென்சனால் தலைவலி ஏற்படுவது அல்லது வேறு காரணங்களால் தலைவலி ஏற்படும்போது உங்கள் தலையைச் சுற்றி இறுக்கமான பேண்ட் அணியப்பட்டதுபோல் இருக்கும். இதுபோன்ற தலைவலிகளைப் போக்குவதற்கு தலையில் செய்யப்படும் மசாஜ்கள் உதவும். முகத்தில் செய்யப்படும் மசாஜ்கள் உங்களின் மனஅழுத்தத்தைப் போக்கும். தோள்பட்டை, கழுத்து மற்றும் தலைப்பகுதியில் மசாஜ் செய்யும்போது, தலைவலியின் அறிகுறிகளை போக்கும்.
தசைகளில் உள்ள பிடிப்பு மற்றும் புண் ஆகியவற்றை குறைக்கிறது
உங்கள் தசைகளில் புண் அல்லது வீக்கம் இருந்தால் அதை குறைத்து அந்தப்பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளுக்கு அமைதியைத்தரும். கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர், தசைகளில் ஏற்படும் சோர்வைப் போக்கும்.
ஆர்த்ரிட்டிஸ் மற்றும் மூட்டுவலிக்கு தற்காலிக நிவாரணம் தரும்
உங்களுக்கு ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகள் இருந்தால், உங்களின் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி இருக்கும். நீங்கள் மசாஜ் செய்யும்போது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாயும். அது அந்த நேரத்தில் உங்கள் வலியைப்போக்கும். நீங்கள் மசாஜ் செய்வதற்கு முன் உங்களுக்கு மூட்டு வலி பிரச்னைகள் இருப்பதை தெரிவித்தால், மசாஜ் செய்பவர்கள் அதற்கு ஏற்ப உங்களுக்கு உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகளுள் ஒன்று, அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதன் மூலம் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும். இது தசைகளை அமைதிப்படுத்தி, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது
மசாஜ் செய்யும்போது, அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. தேவையற்ற செல்களை அழித்து இதைச் செய்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அது உங்கள் உடலை நோய் மற்றும் தொற்றுகளில் இருந்து காக்கிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
முகத்தில் மசாஜ் செய்யும்போது அது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை தூண்டி, சருமத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது. கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சருமம் ஆரோக்கியம் அடைகிறது.
உடல் நெகிழ்வடைகிறது
மசாஜ் செய்யும்போது உங்கள் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்படுகிறது. இதனால் தசைகளின் இறுக்கம் குறைகிறது. மூட்டுக்களை காக்கிறது.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மனஅழுத்தம், பதற்றம் ஆகியவற்றை போக்கி அமைதிப்படுத்துகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்