Masala Garlic Rice : மசாலா கார்லிக் ரைஸ்; பூண்டு சுவையே பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Masala Garlic Rice : மசாலா கார்லிக் ரைஸ்; பூண்டு சுவையே பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ ரெசிபி!

Masala Garlic Rice : மசாலா கார்லிக் ரைஸ்; பூண்டு சுவையே பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 20, 2025 01:37 PM IST

மசாலா காலிக் ரைஸ் செய்வது எப்படி என்று பாருங்கள்.

Masala Garlic Rice : மசாலா கார்லிக் ரைஸ்; பூண்டு சுவையே பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ ரெசிபி!
Masala Garlic Rice : மசாலா கார்லிக் ரைஸ்; பூண்டு சுவையே பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்

பூண்டு – 10 பல்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை – அரைப்பழம்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

எண்ணெய் – ஒரு குழிக்கரண்டியளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

சாதத்தை உதிர வடித்து ஆறவைத்துவிடவேண்டும்.

பூண்டை உரித்து உரலில் நன்றாக நைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். தண்ணீர் கொஞ்சம் தெளித்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய்விட்டு சூடானவுடன் தயாராக உள்ள பூண்டு பேஸ்ட்டை சேர்க்கவேண்டும். இதை நன்றாக கிளறிவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது எலுமிச்சையைப் பிழிந்துவிடவேண்டும்.

கடைசியான சாதம், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவேண்டும். சூப்பர் சுவையான காரசாரமான மசாலா கார்லிக் ரைஸ் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மட்டுமே போதும்.

பூண்டு பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இது ஒரு நல்ல லன்ச் பாக்ஸ் ரெசிபி. இதை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லன்ச்சாக கொடுத்துவிட்டீர்கள் என்றால், அடிக்கடி வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அத்தனை சுவையானது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

சாதம் சேர்க்காமல் மல்லித்தழை மற்றும் உப்பு தூவி சட்னிபோல் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணுவீர்கள். அட்டகாசமான சுவையான இந்த மாசாலா கார்லிக் ரைஸை கட்டாயம் செய்து சாப்பிட்டுப்பாருங்கள். இதை செய்வதும் எளிது. நிமிடத்தில் தயாராகிவிடும். உங்களுக்கு சாம்பார், ரசம் வைக்க கஷ்டமாக இருக்கும்போது, இதை மட்டும் செய்து வைத்துவிட்டு ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம்.

பூண்டின் நன்மைகள்

தினமும் 4 முதல் 6 பற்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மலைப்பூண்டைவிட சிறிய பூண்டுதான் அதற்கு சிறந்தது. அதை நீங்கள் பின்பற்ற சாதத்துடனே சேர்த்து சாப்பிடும் வழி ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்தால் தினமும் காலை டிஃபனுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். உடல் எடை அதிகரிக்க உதவும், ரத்த கொதிப்பு அதிகம் ஆவதைத்தடுக்கும். உடலுக்குள் நுண் கிருமிகள் புகாமல் பார்த்துக்கொள்ளும். மாதவிடாயை சீராக்கும். ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும். இதுபோன்ற பல வழிகளில் அது நமது உடலுக்கு நன்மைகளைத் தருவதால் இந்த பூண்டை நாம் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். எனவே எப்படி சேர்க்கலாம் பாருங்கள். முழு உடலுக்கும் பூண்டு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

பூண்டு அதன் தனித்தன்மையான கார சுவை மற்றும் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. தினமும் உணவில் பூண்டை கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டை மென்று சாப்பிடலாம். அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அது உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்கிறது. அது என்ன நன்மைகளை உங்கள் உடலுக்கு செய்கிறது என்று பாருங்கள்.

இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் கொண்டது.

மூட்டுவலியைப் போக்குகிறது.

செரிமானத்தை அதிகரித்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது

எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தை தருகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.