Masala Butter Milk : வெயிலை அடித்து விரட்டும் மோர்! மசாலா கலந்து நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது!
Masala Butter Milk : வெயிலை அடித்து விரட்டும் மசாலா மோர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
தயிர் – ஒரு கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மாங்காய் – அரை கப்
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில், தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய், சீரகம், கறிவேப்பிலை, மாங்காய், மல்லித்தழை மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வடிகட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து, பரிமாறும் டம்ளரில் சிறிது காராபூந்தி தூவி பருகக் கொடுக்கவேண்டும்.
அடிக்கும் வெயிலுக்கு இந்த மசாலா மோர் உங்கள் உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல, வெயில் கால நோய்களை எதிர்த்து போராட உதவும்.
இதற்கு பயன்படுத்தும் மோர் 8 மணி நேரம் மட்டுமே புளிக்கவைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மேல் புளித்திருந்தால், அது நன்றாக இருக்காது.
மோரின் நன்மைகள்
புளிக்கவைக்கப்பட்ட பால் பொருட்களிலே மோர்தான் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. பாலை தயிராக்கி, தயிரை கடைந்து மோராக்கி, அதில் இருந்து வெண்ணெயை பிரித்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது. மோர் பருகுவது பல காலச்சாரங்களில் பல காலமாக இருந்து வருகிறது.
இது புளிப்பு, துவர்ப்பு, உப்பு கலந்த சுவையில் இருக்கும். சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது. செரிமானம் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை மோரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது.
மோரின் முக்கிய நன்மைகளுள் ஒன்று செரிமானத்துக்கு உதவுவது. மோரில் உள்ள லாக்டோபேசிலஸ் அசிடோஃபிலஸ் மற்றும் லாக்டோபேசிலஸ் பல்கேரிகஸ் ஆகிய ப்ரோபயோடிக்குகள், குடல் நுண்ணுயிர்களை பராமரிக்க உதவுகின்றன. எனவே தினமும் ஒரு டம்ளர் மோர் பருகுவது, அஜீரணம், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.
மோர், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள கொழுப்பு குறைந்த புரதம், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை கொடுத்து, செல்களின் வளர்ச்சி மற்றும் மீட்டுருவாக்கம் செய்ய உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி12, ரிபோஃப்ளாவின் மற்றும் கால்சியம், எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
மோரில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி, வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்பை உருவாக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சிய சத்துக்கள், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.
ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உடல் நீர்ச்சத்துடன் இருப்பது அவசியம். மோர், புத்துணர்வும், நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும் பானமாகும். இதில் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் உள்ளன.
அது உடலின் நீர் சமநிலையை உறுதிப்படுத்துகிறது. கடும் வெயிலுக்கு மோர் நல்லது. உடற்பயிற்சிக்குப் பின் மோர் பருகுவது நல்லது. இது உடல் இழந்த நீர்ச்சத்தை கொடுக்கிறது.
உடல் எடையை சரியாக பராமரிக்க விரும்புபவர்கள், மோரை பருகுவதால், அவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது.
உள் உறுப்புக்களின் ஆராக்கியத்துக்கு மட்டும் மோர் நன்மை கொடுக்கவில்லை. உங்கள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் அதற்கு உதவுகிறது.
உங்கள் உடலில் இதய ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசிய சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது சோடியத்துக்கு எதிராக வினைபுரிகிறது.
இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
வாதத்தை சமப்படுத்த மோர் உதவுகிறது. இதனால் நடுக்கம், பதற்றம் ஆகிய உணர்வுகள் உடலில் குறைக்கப்படுகிறது. கோடை காலங்களில் உடலை குளிர்விக்கிறது.
பித்த நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை தடுகிகறது. கபம் உள்ளவர்கள் மிதமான அளவில் மட்டுமே எடுக்க வேண்டும். ஏனெனில் குளிர்ச்சி கபத்தை அதிகரித்துவிடும். எனவே அவர்கள் கோடை காலத்தில் மட்டும் எடுப்பது நல்லது.
டாபிக்ஸ்