Marundhu Kuzhambu : மருத்துவ செலவு வைக்காத மருந்து குழம்பு! வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட வியாதிகள் தெறித்து ஓடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Marundhu Kuzhambu : மருத்துவ செலவு வைக்காத மருந்து குழம்பு! வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட வியாதிகள் தெறித்து ஓடும்!

Marundhu Kuzhambu : மருத்துவ செலவு வைக்காத மருந்து குழம்பு! வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட வியாதிகள் தெறித்து ஓடும்!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2024 07:00 AM IST

Marundhu Kuzhambu : மருத்துவ செலவு வைக்காத மருந்து குழம்பை வாரத்தில் 2 நாட்கள் வைத்து சாப்பிட வியாதிகள் அனைத்தும் தெறித்து ஓடும். சாப்பிட்டு பலன்பெறுங்கள்.

Marundhu Kuzhambu : மருத்துவ செலவு வைக்காத மருந்து குழம்பு! வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட வியாதிகள் தெறித்து ஓடும்!
Marundhu Kuzhambu : மருத்துவ செலவு வைக்காத மருந்து குழம்பு! வாரத்தில் 2 நாட்கள் சாப்பிட வியாதிகள் தெறித்து ஓடும்!

முதலில் மருந்து குழம்பு பொடி தயாரித்துக்கொள்ள வேண்டும். இந்தப்பொடியை நீங்கள் கொஞ்சம் கூடுதலாக செய்து ஃபிரிட்ஜில் ஸ்டோரி செய்துகொள்ள வேண்டும். 

இதை காற்றுப்புகாமல், கை படாமல், தண்ணீர் படாமல் வைத்துக்கொண்டால், அவ்வப்போது வாரத்தில் இரண்டு முறை இந்த மருந்து குழம்பை செய்து சாப்பிட வசதியாக இருக்கும். மேலும் மழை, குளிர் காலங்களில் இதன் தேவை மிகவும் அவசியம். எனவே கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

மருந்துகுழம்பு பொடி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

அதிமதுரம் – 10 கிராம்

வசம்பு – 10 கிராம்

சுக்கு – 10 கிராம்

சித்தரத்தை – 10 கிராம்

வெள்ளை மிளகு – 10 கிராம்

வால்மிளகு – 10 கிராம்

அரிசி திப்பிலி – 10 கிராம்

கண்டந்திப்பிலி – 10 கிராம்

விரலி மஞ்சள் – 1 இன்ச்

வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்

பால் பெருங்காயம் – 1 சிறிய கட்டி

செய்முறை

இந்த பொருட்கள் அனைத்தும் அடுப்பில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அடுப்பு குறைவான தீயில் இருக்க வேண்டும்.

அதிக தீயில் இருக்கக்கூடாது. அதிக தீயில் இருந்தால் அடிபிடித்து கருகிவிடும். குழம்பு நன்றாக இருக்காது. இந்தப்பொருட்கள் உடனே வறுபட்டுவிடும். எனவே இந்தப்பொருட்களை சிறிது நேரம் மட்டுமே வறுத்தால் போதும்.

வறுத்தப்பொருட்களை, ஆறவைத்து, காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ளவேண்டும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

இந்தப்பொடியை பயன்படுத்தி குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்

தாளிப்பு வடகம் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – 20 பல்

புளி – எலுமிச்சை அளவு

(சூடான தண்ணீரில் கரைத்து கரைசல் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்)

கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் – 2 (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடாக்கி, தாளிப்பு வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவேண்டும்.

அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். நறுக்கிய காயையும் சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து, போதிய அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மருந்து குழம்பு பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து சுண்டும் வரை கொதிக்கவிடவேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் எடுத்தால் சுவையான மருந்து குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். ஆரோக்கியமும் கிடைக்கும்.

வீட்டில் அடிக்கடி தொற்றுகளுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதேபோல் வயோதிகர்களுக்கும் செய்துகொடுக்கவேண்டும். உங்கள் வீட்டில் மருந்து செலவே இருக்காது.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்தப்பொடியை செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கக்கூடியவைதான். கட்டாயம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.