Marundhu Kulambu : மருந்து குழம்பு! செரிமானம், வாயுத்தொல்லை வராமல் வயிறை காக்கும் மருத்துவர்!
Marundhu Kulambu : மருந்து குழம்பு! செரிமானம், வாயுத்தொல்லை வராமல் வயிறை காக்கும் மருத்துவர்!
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிய கட்டி
சுக்கு – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 10 (கிள்ளியது)
பூண்டு – ஒரு கப் (உறித்து சுத்தம் செய்தது)
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் மிளகு, சீரகம், உளுந்து, பெருங்காயம், சுக்கு ஆகிய அனைத்தையும் நன்றாக பொன்னிறமாகும் வரை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும். அதிலே கறிவேப்பிலை மற்றும் புளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
புளியை கரைத்து ஊற்ற வேண்டிய தேவையில்லை அப்படியே சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.
இதை நன்றாக வதக்கி ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, வெந்தயம் தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய்களை கிள்ளி சேர்க்க வேண்டும். பின்னர் பூண்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பூண்டை நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த கறிவேப்பிலை விழுதை சேர்த்து, கூடுதலாக சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
சுவையான பூண்டு, மிளகு, கறிவேப்பிலை குழம்பு தயார். சூடான சாதத்தில் நல்ல பசியில் சாப்பிட அமிர்தம் தோற்கும். அத்தனை சுவை நிறைந்தது.
அடிக்கடி செய்து சாப்பிட வயிறுக்கு இதமளிக்கும்.
குறிப்புகள்
கறிவேப்பிலை லேசாக வதங்கினால் போதும்.
இறுதியில் குழம்பு கொதி வந்தால் போதும் இறக்கிவிடலாம்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
கொழுப்பை குறைக்க உதவுகிறது
கறிவேப்பிலை ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்பு உற்பத்தியை தடுக்கிறது. இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
கறிவேப்பிலை செரிமானத்துக்கு உதவுகிறது. இதன் உட்பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவை நீக்கப்பயன்படுகின்றன.
கல்லீரலுக்கு சிறந்தது
டானின்னிஸ் மற்றும் கார்போசோல் ஆல்கலைட்கள், பலமான ஹெபாடோ புரொடெக்டிவ் குணங்கள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ மற்றம் சி, அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை காப்பதுடன் அதன் இயக்கத்துக்கும் உதவுகின்றன.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
சேதமடைந்த தலைமுடிக்கு தலைசிறந்த பலனளிக்கிறது கறிவேப்பிலை. தலைமுடி அடர்த்தியாக வளரவும், தலை முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பூஞ்ஜைக்கு எதிரான திறன், முடிக்கால்களில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது பொடுகுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது
வைட்டமின் ஏ, கரோட்டினாய்ட் நிறைந்தது. இது கார்னியாவை கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் ஏ குறைபாடு, மாலைக்கண், பார்வையிழப்பு, கண் புரை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. ரெட்டினாவை பாதுகாத்து பார்வையிழப்பு எதிராக போராடுகிறது.
பாக்டீரியாவை போக்குகிறது
தொற்றுக்களால் நோய்கள் அதிகரித்து வருகின்றன அல்லது செல்களை சேதப்படுத்துகின்றன. ஆன்டிபயோடிக்குகளுக்கு எதிர்ப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. எனவே மாற்று தொற்று சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
அது கறிவேப்பிலையால் சாத்தியமாகிறது. கார்போசோல் ஆல்கலைட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி பாக்டீரியாக்கள், அழற்சிக்கு எதிரான தன்மைகள் இதில் அதிகம் உள்ளது. இவையனைத்தும், பாக்டீரியாக்களை அழித்து, செல் சேதத்தை குறைக்கிறது.
எடையை குறைக்க உதவுகிறது
எடையிழப்புக்கு சிறந்த தேர்வாக கறிவேப்பிலை உள்ளது. இது உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசிரைட்களை குறைக்க உதவி, உடல் பருமனை தடுக்கிறது.
பக்கவிளைவுகளை தடுக்கிறது
புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி சிகிச்சைகளால் ஏற்படும் குரோமோசோமல் சிதைவை குறைக்க உதவுகிறது. எலும்பையும் பாதுகாக்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
மாதவிடாய் பிரச்னைகளை சரிசெய்கிறது. வயிற்றுப்போக்கு பிரச்னைகளை சரிசெய்கிறது. வலியை குறைக்கிறது. இதை தினமும் உணவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.
நீரிழிவை குணப்படுத்துகிறது
நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. ஒருவர் உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொண்டால், இன்சுலின் கணைய செல்களை உற்பத்தி செய்து, தூண்டி பாதுகாக்கிறது.
காயங்களை குணப்படுத்த உதவுகிறது
காயம்பட்ட இடத்தில் கறிவேப்பிலையை அரைத்து தடவினால் காயங்கள் குணமடைகிறது. தழும்புகள், சூடுவைத்த காயங்களையும் குணப்படுத்துகிறது. ஆபத்தான தொற்றுக்களை சரிசெய்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்