மாங்காய் சாலட் : கோடையைக் கொண்டாடலாமா? பச்சை மாங்காயில் சுவையான சாலட்; எப்படி செய்வது என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாங்காய் சாலட் : கோடையைக் கொண்டாடலாமா? பச்சை மாங்காயில் சுவையான சாலட்; எப்படி செய்வது என்று பாருங்கள்!

மாங்காய் சாலட் : கோடையைக் கொண்டாடலாமா? பச்சை மாங்காயில் சுவையான சாலட்; எப்படி செய்வது என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 15, 2025 12:22 PM IST

பச்சை மாங்காயில் சுவையான சாலட் செய்வது எப்படி என்று பாருங்கள். இதைச் செய்வது மிகவும் எளிது. ஆனால் சுவையோ அபாரமாக இருக்கும்.

மாங்காய் சாலட் : கோடையைக் கொண்டாடலாமா? பச்சை மாங்காயில் சுவையான சாலட்; எப்படி செய்வது என்று பாருங்கள்!
மாங்காய் சாலட் : கோடையைக் கொண்டாடலாமா? பச்சை மாங்காயில் சுவையான சாலட்; எப்படி செய்வது என்று பாருங்கள்!

எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வெறும் பச்சை மாங்காயை நறுக்கிப்போட்டு, உப்பு போட்டு சாப்பிட்டாலே ஒரு தட்டு சோறு கூட எளிதில் காலியாகிவிடும். மாங்காய் இருக்கும்போது வேறு சைட் டிஷ்கள் எதுவும் தேவைப்படாது. அத்தனை சுவையான மாங்காயில் சாலட் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• பச்சை மாங்காய் – 1 (தோல் சீவி பொடியாக நறுக்கியது)

• வெல்லம் – ஒரு ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

• மல்லித்தழை – ஒரு டேபிள் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• வறுத்த சீரகத் தூள் – அரை ஸ்பூன் 

செய்முறை

1. மாங்காயை கழுவி சுத்தம் செய்து, ஒரு வெள்ளைத் துணியால் துடைத்துவிட்டு, அதன் தோலை நீக்கவேண்டும். சிறு பொடியான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், சீரகத் தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

3. அடுத்து வெல்லம் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். இதை சில நிமிடங்கள் அப்படியே ஊறவிடவேண்டும். இது ஊறி தண்ணீர் விடத் துவங்கும்போது, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவேண்டும். சூப்பர் சுவையான மாங்காய் சாலட் தயார்.

4. இதை அப்படியே எந்த ஒரு உணவுடனோ அல்லது மீல்ஸ் உடனோ பரிமாறலாம். இல்லாவிட்டால் பச்சையாகக் கூட சாப்பிடலாம்.

மாங்காய் பிரியர்களின் மனதை கொள்ளை கொள்ளும் இந்த பச்சடி. இதை ஒருமுறை ருசித்துவிட்டால் சீசன் முடியும் வரை உங்கள் வீட்டில் இந்த சாலட்தான் செய்வீர்கள். இப்போதெல்லாம் அனைத்து சீசனும் மாங்காய் கிடைக்கிறதே இதை எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியுமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கோடையில் கிடைக்கும் மாங்காய்க்கு உள்ள அந்த ருசி, வேறு எந்த சீசனில் கிடைக்கும் மாங்காயிலும் இருக்காது. இதை நீங்கள் பரிசோதித்துக்கூட பார்க்கலாம். சித்திரை முதல் ஆனி வரை கிடைக்கும் மாங்காய் மற்றும் மாம்பழங்களே அதிக சுவையைக் கொடுப்பவை. எனவே இந்த மாங்காய் சாலட்டை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.