தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mango Rice That Makes You Want To Taste It Again And Again The Taste Is Unmatched See How To Do It

Mango Rice: திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும் மாங்காய் சாதம்.. டேஸ்ட்டுக்கு ஈடு இணையே இல்லை! எப்படி செய்யணும் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 26, 2024 04:04 PM IST

Mango rice: எலுமிச்சை அல்லது புளியோதரையை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் மாங்காய்களை வைத்து சமையல் செய்ய கோடை காலம்தான் சரியான நேரம். அதனால் தான் இந்த கோடையில் மாங்காய் சாதத்தை செய்து பாருங்கள். மிக எளிதாக செய்து விடலாம். மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும் மாங்காய் சாதம்.. டேஸ்ட்டுக்கு ஈடு இணையே இல்லை! எப்படி செய்யணும் பாருங்க!
திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும் மாங்காய் சாதம்.. டேஸ்ட்டுக்கு ஈடு இணையே இல்லை! எப்படி செய்யணும் பாருங்க! (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

மாங்காய் சாதம் தேவையான பொருட்கள்

ஒரு மாங்காய் -1 (தோலுரித்து துருவியது),

கடுகு - 1/2 டீஸ்பூன்,

வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 3-4,

பச்சை மிளகாய் - 2,

உப்பு -1/2 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - சிறிது,

வடித்த சாதம் - 2 கப்,

கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

சிறிது கறிவேப்பிலை,

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

நிலக்கடலை பருப்பு -1/2 டீஸ்பூன்,

2 டீஸ்பூன் எண்ணெய்,

மாங்காய் சாதம் தயாரிக்கும் முறை

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்க வேண்டும். அதில் உளுத்து, கடலை, நிலக்கடலை பருப்பைப் போட்டு கலந்து விட வேண்டும்.

பிறகு கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும்.

இப்போது துருவிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

இப்போது ஏற்கனவே வேக வைத்து எடுத்த சாதத்தை அதனுடன் கலந்து விட வேண்டும். கடைசியாக அதில் துருவிய தேங்காயையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

கடைசியாக அதன் மேல் கொத்தமல்லி தழையால் அலங்கரித்து 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான மாங்காய் சாதம் ரெடி. பின்னர் சாதத்தை பரிமாறவும்.

மாங்காய் நன்மைகள்

இந்த கோடையில் மாங்காய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இது உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. கோடையில் உடலில் சோடியத்தை சமன் செய்ய உதவுகிறது. மாம்பழம் செரிமானத்திற்கு நல்லது. இது மலச்சிக்கல், அஜீரணம், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கிறது.

மாங்காயில் வைட்டமின் பி உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மாங்காய் மிகவும் நல்லது. இது கல்லீரலை நச்சு நீக்குகிறது. இது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது. இது தசைப்பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

மாங்காய் சாதம் சற்று புளிப்பில்லாத மாங்காயில் இருந்து தயாரிக்க வேண்டும். அப்போது சுவை சூப்பராக இருக்கும். இந்த மாங்காய் சாதம் செய்த உடனேயே சாப்பிட வேண்டும். காலை உணவாகவும் சாப்பிடலாம். சற்று சூடாக இருக்கும் போது புதிதாக சாப்பிடுவது நல்லது. விதவிதமான மாங்காய்கள் விதவிதமான ருசியை தரும்.. இந்த ரெசிபியை நீங்கள் சலிப்படையவே மாட்டீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்