Mango Pachadi : சுவையான மாங்காய் பச்சடி! இனிப்பான சைட்டிஷ்! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது!
Mango Pachadi : சுவையான மாங்காய் பச்சடி, இனிப்பான சைட்டிஷ், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.
தேவையான பொருட்கள்
மாங்காய் – 1
ட்ரெண்டிங் செய்திகள்
வெல்லம் – கால் கப்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் – அரை கப் (துருவியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
மாங்காயை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து, தாளித்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் தாளிக்க வேண்டும்.
பின்னர் மாங்காயை சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வெந்தவுடன் வெல்லம் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் பூ தூவி இறக்க வேண்டும்.
மாங்காயின் நன்மைகள்
உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.
மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாங்காய் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.
இதனால், கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.
மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.
அதனுடன், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்