தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Lassi : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது! கோடையில் மிஸ் பண்ணக்கூடாது மாம்பழ லஸ்ஸி!

Mango Lassi : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது! கோடையில் மிஸ் பண்ணக்கூடாது மாம்பழ லஸ்ஸி!

Priyadarshini R HT Tamil
May 28, 2024 12:00 PM IST

Mango Lassi : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறும், கோடையில் மிஸ் பண்ணக்கூடாது மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mango Lassi : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது! கோடையில் மிஸ் பண்ணக்கூடாது மாம்பழ லஸ்ஸி!
Mango Lassi : படிக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது! கோடையில் மிஸ் பண்ணக்கூடாது மாம்பழ லஸ்ஸி!

ட்ரெண்டிங் செய்திகள்

(எந்த மாம்பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அல்போன்சா மாம்பழங்கள் லஸ்ஸிக்கு கூடுதால் சுவை தருபவை. அது கிடைத்தால் அதையே எடுத்துக்கொள்ளலாம். கிடைக்காவிட்டால், அல்போன்சா மாம்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள்)

ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும்)

சர்க்கரை – கால் கப்

தயிர் – ஒரு கப்

ஐஸ் கட்டிகள் – கொஞ்சம் மட்டும் போதும்.

செய்முறை

பழுத்த மாம்பழங்களை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவேண்டும். பின்னர் அதில் ஏலக்காய்ப் பொடி மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்க்கவேண்டும்.

மாம்பழத்தின் அளவுக்கேற்ப சர்க்கரையை சேர்க்கவேண்டும். அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். தயிர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து மீண்டும் அரைக்கவேண்டும்.

லஸ்ஸியை கண்ணாடி டம்ளரில் சேர்த்து, நறுக்கிய பிஸ்தா மற்றும் நறுக்கிய மாம்பழ துண்டுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி.

இது மாம்பழ சீசன் என்பதால் அதிகளவில் கிடைக்கும் மாம்பழங்களை இதுபோல் பல்வேறு உணவுகளை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் மாம்பழம் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது.

எனவே கிடைக்கும்போதே மாம்பழங்களில் உங்களுக்கு விருப்பமான உணவுகளை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

மாம்பழத்தில் உள்ள நன்மைகள்

உடல் எடையை குறைக்க மாம்பழம் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அவர்கள் புளிப்பு, இனிப்பும் கலந்த மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாம்பழம் சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாம்பழம் மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாம்பழம் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.

இதனால், கல்லீரலுக்கு மாம்பழம் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாம்பழம் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாம்பழம் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மாம்பழத்தை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.

அதனுடன், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாம்பழம் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாம்பழச்சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

மாம்பழங்கள் பல்லை பராமரிக்க உதவுகிறது. மாம்பழங்களை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாம்பழங்களை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.

WhatsApp channel

டாபிக்ஸ்