தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mango Kheer Mango Kheer That Makes You Want To Taste It

Mango Kheer: பார்த்தாலே ருசிக்க தூண்டும் மாம்பழ கீர்.. சத்துக்கள் நிறைந்த மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 22, 2024 05:48 PM IST

Mango Kheer: குழந்தைகளுக்கு மாலையில் சிற்றுண்டியாக கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு சுவையான இனிப்பு என்று சொல்ல வேண்டியதில்லை. பத்து நிமிடங்களில் செய்துவிடலாம். ஆனால் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

மாம்பழ கீர்
மாம்பழ கீர்

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகளுக்கு மாலையில் சிற்றுண்டியாக கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு சுவையான இனிப்பு என்று சொல்ல வேண்டியதில்லை. பத்து நிமிடங்களில் செய்துவிடலாம். ஆனால் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

மாம்பழ கீர் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்

பால் - ஒரு லிட்டர்

மாம்பழ துண்டுகள் - ஒரு கப்

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்

சர்க்கரை - எட்டு ஸ்பூன்

சாதம் - ஐந்து கரண்டி

ஏலக்காய் தூள் - சிட்டிகை

மாம்பழ கீர் செய்முறை

1. இந்த மாம்பழ கீர் செய்ய நன்றாக பழுத்த மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. மாம்பழத்திலிருந்து கொட்டையை நீங்க ஜூஸை எடுத்து ஒரு கோப்பையில் வைக்கவும்.

3. கடாயை அடுப்பில் வைத்து பால் சேர்க்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து பாலை நன்றாக கய்ச்ச வேண்டும்.

4. அந்த பாலில் முன்பு சமைத்த சாதத்தை சேர்க்க வேண்டும்.

5. அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

6. குறைந்த தீயில் வைத்து, அது மசியும் வரை சமைக்க வேண்டும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட வேண்டம்.

7. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கலவையை குளிர விட வேண்டும்.

8. கலவை ஆறிய பிறகு மாம்பழக் கூழ் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

9. கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு பின் பரிமாறலாம்.

மாம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மாம்பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. மாம்பழம் சாப்பிடுவதால் இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் வராது. மாம்பழம் சாப்பிடுவதால் பல வகையான புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

ஆண்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உணவை விரைவாக ஜீரணிக்கச் செய்கிறது. மாம்பழம் சாப்பிடுவதால் சருமம் பொலிவு பெறும். இந்த பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதால் செறிவு அதிகரிக்கும். இதுவும் சீசன் பழம். எனவே கோடையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மாம்பழம் ஒரு ஆரோக்கியமான பழமாகும். விட்டமின் சி, ஏ, ஈ, கே மற்றும் பிற வகை விட்டமின் பி (பி12 தவிர) இதில் அதிகளவில் நிறைந்துள்ளது. நன்றாகப் பழுத்த மாம்பழத்தில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதோடு, ஏராளமான தாதுக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. 

நன்றாக பழுத்த ஒரு மாம்பழம், நம் உடலுக்கு 29 முதல் 32 கிராம் சர்க்கரை சத்துக்களை அளிக்கும். இது நமது உடல் சர்க்கரையின் அளவில் 10 ஆகும். எனவே மாம்பழங்களை கண்டு நாம் ஒரு போதும் அஞ்சத் தேவையில்லை. அதேசமயம் அதிக அளவில் எந்தப் பழத்தை எடுத்துக்கொண்டாலும், அது நம் ரத்ததில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், இதைத் தவிர்க்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்