மாங்காய் வெந்தய ஊறுகாய் : சீசன் வந்துவிட்டது; இப்போதே செய்துவிட வேண்டியதுதான் வெந்தய மாங்காய் ஊறுகாய்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாங்காய் வெந்தய ஊறுகாய் : சீசன் வந்துவிட்டது; இப்போதே செய்துவிட வேண்டியதுதான் வெந்தய மாங்காய் ஊறுகாய்! இதோ ரெசிபி!

மாங்காய் வெந்தய ஊறுகாய் : சீசன் வந்துவிட்டது; இப்போதே செய்துவிட வேண்டியதுதான் வெந்தய மாங்காய் ஊறுகாய்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Apr 12, 2025 07:48 AM IST

மாங்காய் வெந்தய ஊறுகாய் : அனைவரும் செய்ய ஏற்ற எளிமையான ஊறுகாய் ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊறுகாயை ஒருமுறை இப்படி செய்து சாப்பிட்டால் உங்களுக்கு இது மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு மாங்காய் சீசனிலும் செய்து வைத்துவிடுவீர்கள்.

மாங்காய் வெந்தய ஊறுகாய் : சீசன் வந்துவிட்டது; இப்போதே செய்துவிட வேண்டியதுதான் வெந்தய மாங்காய் ஊறுகாய்! இதோ ரெசிபி!
மாங்காய் வெந்தய ஊறுகாய் : சீசன் வந்துவிட்டது; இப்போதே செய்துவிட வேண்டியதுதான் வெந்தய மாங்காய் ஊறுகாய்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• மாங்காய் – 1

• வெந்தயம் – ஒரு ஸ்பூன்

• வர மிளகாய் – 4

• கடுகு – கால் ஸ்பூன்

• மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

• நல்லெண்ணெய் – 100 மில்லி லிட்டர்

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

• முதலில் மாங்காயை பெரியதும் அல்லாமல் சிறியதும் அல்லாமல் நடுத்தர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். இதை உப்பில் ஊறவைத்து எடுத்து 3 நாட்கள் வெளியிலில் உலர்த்த வேண்டும்.

• ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் வெந்தயம் மற்றும் மிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இவை பொன்னிறமானவுடன், இறக்கி ஆறவைத்து ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை காய்ந்துள்ள மாங்காய்களில் சேர்த்து நன்றாக குலுக்கி வைக்கவேண்டும்.

• எஞ்சிய நல்லெண்ணெயை ஒரு கடாயில் சேர்த்து அது சூடானவுடன் கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் மஞ்சள் பொடியை சேர்த்து உடனே இறக்கி இந்த மாங்காயில் ஊற்றி ஊறவிடவேண்டும்.

• இதை பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்கி, வெள்ளைத் துணிபோட்டு மூடி வெயிலில் தினமும் காய வைக்கவேண்டும். இது ஊறஊறத்தான் சுவை அதிகம் கொடுக்கும். நன்றாக ஓரிரு நாட்கள் வெயிலில் உலர்த்தி ஊறவிட்டு சாப்பிட்டால் சூப்பர் சுவையான வெந்தய மாங்காய் ஊறுகாய் தயார்.

இதை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, இட்லி, பூரி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த சீசனில் மாங்காய்கள் அதிகம் கிடைக்கும். மாங்காய் பிரியர்களுக்கு தினமுமே மாங்காய்கள் வேண்டும். அவர்கள் விரும்பி சாப்பிட ஏதுவாக இதுபோல் ஊறுகாயாக செய்து வைத்துக்கொண்டால் தினமும் சாப்பிடலாம். இது சாப்பிடவுடம் நன்றாக இருக்கும். எனவே இதுபோல் ஊறுகாயாக செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.