Mango Eating: உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்?
Mango Eating : இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் மாம்பழத்தை மிதமாக சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
கோடையில் மாம்பழம் அதிகமாக கிடைக்கின்றனது. இதை பலரும் விரும்பி உண்கின்றனர். சிலர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடுகிறார்கள். ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் அளவில்லாமல் சாப்பிடுகிறார்கள். மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் வியத்தகு அளவில் அதிகரிக்கும்.
எனவே, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த, நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் மாம்பழத்தை மிதமாக சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் அதிகமாக சாப்பிடுவதால், விரைவில் உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது.
மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது. உங்கள் மன ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையைப் பாதுகாக்கிறது. மாகுலர் சிதைவு போன்ற வயது தொடர்பான பார்வை பிரச்சனைகளைத் தடுக்கிறது. மாம்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், மாம்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது மனநிலையை பராமரிக்கிறது.
ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்கள் சாப்பிடலாம்?
ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்களை சாப்பிடலாம் என்று கூறியுள்ளார். நீங்கள் ஒரு பெரிய மாம்பழத்தில் பாதி அல்லது 150 கிராம் பழத்தை சாப்பிடலாம் என்று அவர் விளக்குகிறார். இந்த பழம் சுமார் 125-150 கலோரிகளை வழங்குகிறது.
300-350 கிராம் எடையுள்ள ஒரு பெரிய மாம்பழத்தில் 250 முதல் 300 கலோரிகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2,000 கலோரிகள் தேவை. ஒரு பெரிய மாம்பழத்தை சாப்பிடுவது அவர்களின் மொத்த தினசரி கலோரி தேவையில் 15 சதவீதத்தை வழங்குகிறது.
ஒரு நடுத்தர அளவிலான மாம்பழத்தில் சுமார் 50 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே ஒரு நாளைக்கு அரை பழம் அல்லது முழு பழம் சாப்பிடுங்கள். இந்த பழத்தை நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. எனவே உண்ணும் முன் ஊறவைத்த சியா விதைகள், ஊறவைத்த பாதாம், வால் நட்ஸ் போன்றவற்றை மாம்பழத்துடன் கலந்து சாப்பிடலாம். மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.
மாம்பழம் சாப்பிட உகந்த நேரம்
மாம்பழம் சாப்பிடும் நேரமும் மிக முக்கியமானது. குறிப்பாக உடல் உழைப்புக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது. உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மாம்பழம் சாப்பிடுவதால் அதிக எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்க ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பழங்களை சாப்பிடக்கூடாது. மேலும், இந்தப் பழத்தை சாப்பிட்ட உடனேயே ஊறவைத்த சியா விதைகள், பாதாம், வால் நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்