மாங்காய் கறி : சேலம் மாங்கா கறி; இந்த சீசனில் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டிய ரெசிபிகளுள் ஒன்று!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாங்காய் கறி : சேலம் மாங்கா கறி; இந்த சீசனில் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டிய ரெசிபிகளுள் ஒன்று!

மாங்காய் கறி : சேலம் மாங்கா கறி; இந்த சீசனில் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டிய ரெசிபிகளுள் ஒன்று!

Priyadarshini R HT Tamil
Published May 26, 2025 12:59 PM IST

மாங்காய் கறி : மாங்காயை வைத்து வெறும் பச்சடி, குழம்பு மற்றும் ஊறுகாய் மட்டுமே தயாரித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது அதில் துவையல், சட்னி என பல்வேறு வகை உணவுகளையும் செய்கிறார்கள். அதில் ஒன்றான சேலம் மாங்காய் கறியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

மாங்காய் கறி : சேலம் மாங்கா கறி; இந்த சீசனில் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டிய ரெசிபிகளுள் ஒன்று!
மாங்காய் கறி : சேலம் மாங்கா கறி; இந்த சீசனில் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டிய ரெசிபிகளுள் ஒன்று! (Archana's Kitchen )

தேவையான பொருட்கள்

வறுத்த மசாலா அரைக்க

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

• உளுந்து – ஒரு ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• பெரிய வெங்காயம் – 1

• தேங்காய் பற்கள் – கால் கப்

• வர மிளகாய் – 2

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 4 ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• சின்ன வெங்காயம் – 7

• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• மாங்காய் – 8 துண்டுகள்

• மல்லித்தழை - சிறிதளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வெந்தயம் என சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம், தேங்காய் பற்கள் மற்றும் வர மிளகாய் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். இதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மசாலாவை அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த விழுதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

3. அடுத்து சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நல்ல மசிய வதக்கவேண்டும்.

4. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்துவிட்டு, அரைத்த மசாலா விழுது மற்றும் போதிய அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும்.

5. அது கொதித்து பச்சை வாசம் போனவுடன், அதில் மாங்காய் துண்டுகளை சேர்க்கவேண்டும்.

6. மாங்காய் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டால் போதும். அதிகம் கொதித்தால் மாங்காய் துண்டுகள் கரைந்து விடும். எனவே சில நொடிகள் மட்டும் கொதிக்கவிட்டு, அது வெந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான சேலம் மாங்காய் கறி தயார்.

இதை சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என சாதம் மற்றும் டிஃபனுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த மாங்காய் கறியை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதுவும் மாங்காய் சீசனிலே செய்து விடுங்கள். அப்போதுதான் அது மிகவும் சுவையானதாக இருக்கும். கோடையில் மாங்காய் சீசனில் நீங்கள் மாங்காய் உணவுகளை சாப்பிட்டு மகிழ இது மற்றுமொரு ரெசிபியாகும்.