Mango - Coconut Chutney : மணமணக்கும் மாங்காய் - தேங்காய் சட்னி! ஒரே மாதிரி சட்னி போர் அடிச்சா? இதோ இப்டி செய்ங்க!
Mango Chutney : மணமணக்கும் மாங்காய் சட்னி! ஒரே மாதிரி சட்னி போர் அடிச்சா? இதோ இப்டி செய்ங்க!
கோடையில் களைகட்டும் மாங்காய் பலரின் ஃபேவரைட். இதை வைத்து எந்த மாதிரியான சுவையிலும் நாவுக்கு விருந்து வைக்கலாம். அந்த வகையில் மாங்காய் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்
தேவையான பொருட்கள் -
துருவிய தேங்காய் – ஒரு கப்
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் – 4 துண்டுகள்
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் (பெரியது) – ஒன்று
தாளிக்க
கடுகு – கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – ஒரு பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை -
மாங்காயை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் தேங்காயையும் எடுத்து துருவிக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மாங்காய், தேங்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அதன் பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
இப்போது புளிப்பான மாங்காய் சட்னி ரெடி. இது கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி வருவது குறையும்.
நன்றி - அறுசுவை சமையல்
மாங்காயின் நன்மைகள்
மாங்காயை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? ஆனால் அதில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டால் அது உங்களுக்கு இன்னும் பிடித்த காய் ஆகிவிடும்.
உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.
மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாங்காய் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.
இதனால், கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.
மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.
அதனுடன், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாங்காயை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்