மாம்பழ மோர் குழம்பு : மாம்பழ மோர் குழம்பு; இனிப்பு, காரம், புளிப்பு கலந்து சூப்பர் சுவையில் அசத்தும்! கேரளாவில் பிரபலம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாம்பழ மோர் குழம்பு : மாம்பழ மோர் குழம்பு; இனிப்பு, காரம், புளிப்பு கலந்து சூப்பர் சுவையில் அசத்தும்! கேரளாவில் பிரபலம்!

மாம்பழ மோர் குழம்பு : மாம்பழ மோர் குழம்பு; இனிப்பு, காரம், புளிப்பு கலந்து சூப்பர் சுவையில் அசத்தும்! கேரளாவில் பிரபலம்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 24, 2025 03:36 PM IST

மாம்பழ மோர் குழம்பு : இந்த குழம்புக்கு மீடியமான அளவு பழுத்த மாம்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை தேங்காய் மற்றும் தயிர் வைத்து செய்யவேண்டும். இது கேரளாவின் முக்கியமான உணவுகளுள் ஒன்றாகும். இதை காய்கறிகளிலும் செய்யலாம். இதை சூடான சாதத்தில் சேர்த்து அப்பளத்துடன் பரிமாற சுவை அள்ளும்.

மாம்பழ மோர் குழம்பு : மாம்பழ மோர் குழம்பு; இனிப்பு, காரம், புளிப்பு கலந்து சூப்பர் சுவையில் அசத்தும்! கேரளாவில் பிரபலம்!
மாம்பழ மோர் குழம்பு : மாம்பழ மோர் குழம்பு; இனிப்பு, காரம், புளிப்பு கலந்து சூப்பர் சுவையில் அசத்தும்! கேரளாவில் பிரபலம்! (yummy tummy aarthi )

தேவையான பொருட்கள்

• பழுத்த மாம்பழம் – 1

• மோர் – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• தேங்காய்த் துருவல் – அரை கப்

• வர மிளகாய் – 8

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• பச்சரிசி – ஒரு ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

• கடுகு – ஒரு ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. பச்சரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.

2. மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி, பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

3. தண்ணீரில் உப்பு சேர்த்து மாங்காயையும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதிக்க துவங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவேண்டும். இதை ஆறவைத்து மாம்பழத்தை கரண்டியால் மசித்து வைத்துக்கொள்ளவேண்டும். மாம்பழம் நிமிடத்தில் வெந்துவிடும் என்பதால் அருகில் இருந்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

4. கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் வெந்தயம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுபட்டவுடன், அதை ஆறவைத்து, ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் பச்சரிசி மற்றும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

5. அடுத்து தயிர் மற்றும் கலந்து வைத்துள்ள மாம்பழக்கூழை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். உப்பு சேர்து கலந்துகொண்ணவேண்டும்.

6. கடாயில் இந்த கலவையைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். அது கொதிக்க துவங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

7. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கறிவேப்பிலையை சேர்த்து பொரிந்தவுடன் இதை மோர் குழம்பில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையான மாம்பழ மோர் குழம்பு தயார். இதை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாற சுவை அள்ளும். இதை சப்பாத்தி மற்றும் ரொட்டியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.