மாநகரம் பட நடிகர் ஸ்ரீயா இது! இவருக்கு என்ன தான் ஆச்சு! இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ யின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போட்டோ மற்றும் வீடியோக்களால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என அதிர்ச்சியாகி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமாவில் சிறப்பாக நடிக்கும் பல நடிகர்களும் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே மாறி பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து போகின்றனர். இது போன்ற நிலையில் இருக்கும் நடிகர்களை சக நடிகர்கள் உதவி செய்து தேற்றுவார்கள். தற்போது இதே போன்ற நிலையில் மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீக்கு வந்து விட்டதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான். ஸ்ரீ வெளியிட்ட போட்டோக்களில் சிலவற்றில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறப்பான நடிப்பு
நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது, மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று என சில படங்களில் மட்டுமே முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். ஆனால் இந்த அனைத்து படங்களிலும் அவரது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதும் உண்மை தான். ஒவ்வொரு படங்களில் ஒவ்வொரு விதமான நடிப்பை காட்டியிருப்பார். வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது படத்தில் அப்பாவி இளைஞனாக காதல் வயப்படும் போதும், தன் காதலிக்காக செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போதும் என ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்து இருப்பார்.
மாநகரத்தில் கோவாக்கார இளைஞனாக, வில் அம்பு படத்தில் சுற்றித் திரிந்து கெத்து காட்டும் பையனாக என அசத்தியிருப்பார். இவர் இனி பல படங்களில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இறுகப்பற்று படத்திற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்க வில்லை. மேலும் பிக்பாஸ் முதலாவது சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்று என்னால் இங்கு இருக்க முடியவில்லை எனக் கூறி அவராகவே வெளியேறினார்.
விளக்கம் அளிக்கும் ரசிகர்கள்
நடிகர் ஸ்ரீயின் இன்ஸ்டா பதிவுகளுக்கு கீழே பல ரசிகர்கள் இவருக்கு என்ன தான் ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். பலரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை டேக் செய்து உதவி செய்யுமாறு கேள்வி எழுப்பி வருகின்றனர். சில வீடியோக்களில் ஸ்ரீ பாடல் பாடியுள்ளார். மேலும் நீளமாக முடி வளர்த்து அதனை கலர் செய்து உள்ளார். இது ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு நடிகர் ஸ்ரீ தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. அவரே நான் நன்றாக தான் இருக்கிறேன் எனக் கூறும் வரை இந்த நெட்டிசன்கள் அவரைக் குறித்து பேசிக்கொண்டேதான் இருப்பார்கள் என்பது உண்மையே.

டாபிக்ஸ்