மாம்டிகாயா : மாம்டிகாயா, ஆந்திரா ஸ்பெஷல் மாங்கா பப்பு; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாம்டிகாயா : மாம்டிகாயா, ஆந்திரா ஸ்பெஷல் மாங்கா பப்பு; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்!

மாம்டிகாயா : மாம்டிகாயா, ஆந்திரா ஸ்பெஷல் மாங்கா பப்பு; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Published Jun 03, 2025 01:00 PM IST

மாம்டிகாயா : ஏனெனில் இதுதான் இதை செய்ய ஏற்ற சீசன். இப்போதுதான் அதிக சுவை கொண்ட மாம்பழங்களும், மாங்காய்களும் கிடைக்கும். எனவே இப்போது இதை முயற்சி செய்து பார்த்துவிடுங்கள்.

முட்டை பொடிமாஸ் மசாலா; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்! இதோ ரெசிபி!
முட்டை பொடிமாஸ் மசாலா; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• பருப்பு – ஒரு கப்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• பூண்டு – 2 பல்

• விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு

• மாங்காய் – 1 (தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவேண்டும்)

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது, சிறியதாகவும், மாங்காயின் புளிப்பு சுவைக்கு ஏற்பவும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக புளிப்பு கொண்ட மாங்காய் என்றால் தக்காளியின் அளவை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவேண்டும்)

• பச்சை மிளகாய் – 3 (முழுதாக சேர்க்கவேண்டும்)

• உப்பு – தேவையான அளவு

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

• கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – அரை ஸ்பூன்

• உளுந்து – அரை ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 2

• பூண்டு – 6 பல் (தட்டியது)

செய்முறை

1. ஒரு குக்கரில் அரை மணி நேரம் ஊறவைத்து அலசி சுத்தம் செய்த பருப்பு, பெருங்காயம், விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து 2 விசில் விட்டு வேகவைத்து இறக்கவேண்டும்.

2. அடுத்து அதை மசித்துவிட்டு, மாங்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், முழு பச்சை மிளகாய், உப்பு என அனைத்தும் சேர்த்து மீண்டும் குக்கரை மூடி மேலும் 2 விசில்கள் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். இதை நன்றாக கடைந்துகொள்ளவேண்டும்.

3. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம் தாளிக்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, வர மிளகாய், தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி வேகவைத்து மசித்த மாங்காய் பப்புவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

4. அனைத்தையும் கலந்துவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையான மாங்காய் பப்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

மாம்டி காயா, இது ஆந்திர ஸ்பெஷல் ரெசிபியாகும். இதை சாதம், டிஃபன் என இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த மாங்காய் பப்புவை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். ஏனெனில் இதுதான் இதை செய்ய ஏற்ற சீசன். இப்போதுதான் அதிக சுவை கொண்ட மாம்பழங்களும், மாங்காய்களும் கிடைக்கும். எனவே இப்போது இதை முயற்சி செய்து பார்த்துவிடுங்கள்.