தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Malabar Cucumber Pachadi : அடிக்கிற வெயிலுக்கு இதமா வேறு என்ன இருக்க முடியும்? மலபார் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!

Malabar Cucumber Pachadi : அடிக்கிற வெயிலுக்கு இதமா வேறு என்ன இருக்க முடியும்? மலபார் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!

Priyadarshini R HT Tamil
Apr 08, 2024 06:00 AM IST

Malabar Cucumber Pachadi : இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உடலில் செல்கள் இறக்க காரணமாகும் ஃப்ரி ரேடிக்கல்களை அழிக்கச்செய்கிறது. இதில் உள்ள குர்குபிட்டாசின்ஸ் போன்ற உட்பொருட்கள் பரங்கிக்காயிலும் உள்ளது.

Malabar Cucumber Pachadi : அடிக்கிற வெயிலுக்கு இதமா வேறு என்ன இருக்க முடியும்? மலபார் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!
Malabar Cucumber Pachadi : அடிக்கிற வெயிலுக்கு இதமா வேறு என்ன இருக்க முடியும்? மலபார் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!

ட்ரெண்டிங் செய்திகள்

கெட்டித்தயிர் – 2 கப்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

மிளகாய்வற்றல் – 1

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் – அரை கப்

பூண்டு பல் - 1

பச்சை மிளகாய் - 1

சீரகம் – கால் ஸ்பூன்

செய்முறை

மலபார் வெள்ளரிக்காயை தோல் சீவி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள தேங்காய் துருவல், பூண்டு பல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் ஆகிய பொருட்களை சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவேண்டும்.

வெள்ளரிக்காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவேண்டும். அவை நன்றாக ஆறியதும் தேவையான அளவு உப்பு மற்றும் கெட்டித்தயிர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பச்சடியில் கலந்து கொள்ளவேண்டும்.

வெள்ளரிக்காயின் நன்மைகள்

50 கிராம் வெள்ளரியில், 7.8 கலோரிகள், 1.9 கிராம் கார்போஹைட்ரேட்கள், 0.3 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 0.3 கிராம் நார்ச்சத்துக்கள், 8.5 மைக்ரோகிராம் வைட்டமின் கே, 1.5 மில்லிகிராம் வைட்டமின் சி, 6.8 மில்லிகிராம் மெக்னீசியம், 76.4 மில்லிகிராம் பொட்டாசியம், குர்குபிட்டாசின்ஸ் ஆகியவை உள்ளன.

இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உடலில் செல்கள் இறக்க காரணமாகும் ஃப்ரி ரேடிக்கல்களை அழிக்கச்செய்கிறது. இதில் உள்ள குர்குபிட்டாசின்ஸ் போன்ற உட்பொருட்கள் பரங்கிக்காயிலும் உள்ளது.

சரும ஆரோக்கியத்துக்கு நல்லது

வெள்ளரியுடன் தேன், சாமந்தி அல்லது லாவண்டர் பூக்களை அரைத்து அதை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெரும். வெள்ளரியை ஃபிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து, அதை வெட்டி, கண்களில் வைத்தால் உடலை குளுமையாக்கும். முகத்துக்கு பொலிவுதரும். கண்களில் கருவளையங்களை குணமாக்கும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது

வெள்ளரிச்சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஃபோலேட் மற்றும் சிங்க் ஆகியவை ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

தினமும் வெள்ளரிச்சாறு அருந்துவதால் மன ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் கற்றல், கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது உங்கள் மன தைரியத்தை அதிகரித்து, மனஅழுத்தத்தை சமநிலைப்படுத்தி, நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும்.

வேனிற்கட்டிகளை குணமாக்கும்

வெயிலால் ஏற்படும் வேனிற் கட்டிகளுக்கு வெள்ளரி மிகவும் சிறந்தது. இதை பேஸ்டாக்கி உங்கள் சருமத்தில் பூசினால், வேனிற்கட்டிகளை போக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

செரிமானத்துக்கு உதவுகிறது

வெள்ளரிச்சாறு செரிமானம் மற்றும் வளர்சிதைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக கால்சியம் இதற்கு காரணமாகிறது.

எலும்பு ஆரோக்கியம்

வெள்ளரியில் உள்ள கால்சியச்சத்து செரிமானத்துக்கு மட்டுமல்ல, எலும்புகள் வலுப்பெறவும் உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், அமைப்புக்கும் உதவுகிறது.

ஆரோக்கியமான இதயம்

வெள்ளரி சாறில் உள்ள வைட்டமினி பி1, உங்கள் இதயத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.

தசைகளுக்கு நல்லது

வெள்ளரியில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

கழிவு நீக்கம்

உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுவதில் இந்த சாறுக்கு நிகர் வேறொன்றும் இல்லை.

நீர்ச்சத்து

உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும். வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

மயக்கம்

வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது. வேலையால் சோந்து போனீர்கள் என்றால், அதை நீக்குகிறது. இதில் உள்ள மினரல்களும், வைட்டமின்களும் சோர்வை போக்க உதவுகிறது. உங்களை ஆற்றலுடன் வைத்துக்கொள்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்