மக்கானா பாயாசம் : மக்கானா பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்; உங்கள் வீட்டு விசேஷங்கள் மணக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மக்கானா பாயாசம் : மக்கானா பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்; உங்கள் வீட்டு விசேஷங்கள் மணக்கும்!

மக்கானா பாயாசம் : மக்கானா பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்; உங்கள் வீட்டு விசேஷங்கள் மணக்கும்!

Priyadarshini R HT Tamil
Updated May 11, 2025 03:16 PM IST

மக்கானா பாயாசம் : மன அழுத்தத்துக்கு நிவாரணமாகிறது. அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த மக்கானாவில் பாயாசமும் செய்ய முடியும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

மக்கானா பாயாசம் : மக்கானா பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்; உங்கள் வீட்டு விசேஷங்கள் மணக்கும்!
மக்கானா பாயாசம் : மக்கானா பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்; உங்கள் வீட்டு விசேஷங்கள் மணக்கும்! (arthi madan)

மக்கானா லோ கிளைசமிக் உணவுகள் பட்டியலில் உள்ளதால், இது ரத்த சர்க்கரை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது. குளூட்டன் இல்லாதது மற்றும் எளிதாக செரிக்கக் கூடியது. இந்த மக்கானாவில் கொலாஸ்ட்ரால் குறைவாகவும், மெக்னீசியச் சத்துக்கள் அதிகமும் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைத் முறைப்படுத்துகிறது. இதில் உள்ள தியாமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மாக்கானாவை மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும் ஒரு உணவாகவும், நினைவாற்றலைப் பெருக்கவும் செய்கிறது. மனஅழுத்தத்துக்கு நிவாரணமாகிறது. அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த மக்கானாவில் பாயாசமும் செய்ய முடியும். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

• தாமரை விதைகள் – 2 கப்

• காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர்

• முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு (நெய்யில் வறுத்தது)

• ஏலக்காய் – 2

• குங்குமப் பூ – கால் ஸ்பூன்

• திராட்சை – ஒரு கைப்பிடியளவு

• சர்க்கரை – அரை கப்

• நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. ஒரு கடாயில் நெய் ஊற்றி, தாமரை விதைகளை வறுக்கவேண்டும்.

2. சிறிதளவு தாமரை விதைகளை மிக்ஸியில் போட்டு, அதனுடன் முந்திரி பருப்பு, ஏலக்காய் விதைகள், குங்குமப் பூ என அனைத்தும் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு அகலமான கடாயில் பால் ஊற்றி, அதில் வறுத்த தாமரை விதைகளை சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும்.

4. தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

5. அடுத்து அரைத்த முந்திரி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கலக்கவேண்டும். அடுத்து இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

6. அடுத்து குங்குமப் பூ மற்றும் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் கலந்து இறக்கினால் சூப்பர் சுவையான மக்கானா பாயாசம் தயார்.

இதை நீங்கள் பண்டிகை மற்றும் விழாக்கள் என செய்து சாப்பிடலாம். வீட்டில் நடக்கும் சிறிய விழாக்களில் செய்து பரிமாற சுவை அள்ளும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.