அழகு குறிப்புகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமை.. இன்ஸ்டன்டாக போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸி ஐடியா இதோ
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமை.. இன்ஸ்டன்டாக போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸி ஐடியா இதோ

அழகு குறிப்புகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமை.. இன்ஸ்டன்டாக போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸி ஐடியா இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 17, 2025 07:58 PM IST

சூரிய ஒளி, தூசி மற்றும் வியர்வை காரணமாக, முகத்துடன் கைகள் மற்றும் கால்களின் தோல் கருமையை ஆகிறது. இதை போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸியான அழகு குறிப்பு டிப்ஸ்களை பார்க்கலாம். வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய இந்த கிரீமை முகத்தில் தடவினால் உடனடி பலன் பெறலாம்

அழகு குறிப்புகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமை.. இன்ஸ்டன்டாக போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸி ஐடியா இதோ
அழகு குறிப்புகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமை.. இன்ஸ்டன்டாக போக்கி பளபளப்பை பெற உதவும் ஈஸி ஐடியா இதோ

தினமும் வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனைப் பூசி, முகத்திலும் வாயிலும் ஸ்கார்ஃப் கட்டிய பிறகும், தூசி, அழுக்கு மற்றும் வியர்வை முகத்தின் பளபளப்பை மங்க செய்கின்றன. எனவே இதற்கு சரியான சாய்ஸாக முகத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்கும் கிரீமாக, உருளைக்கிழங்கு கிரீம் உள்ளது. சருமத்துக்கு பளபளப்பை தரும் இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இந்த கிரீம் தயாரித்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து கொள்ளலாம். வாரத்துக்கு மூன்று முதல் நான்கு முறை இதை தடவுவதன் மூலம் முகத்தில் பழுப்பு நிறத்தை நீக்குவது மட்டுமல்லாமல், முகத்து்கு பளபளப்பை பெறலாம்.

மிக முக்கியமான விஷயமாக, இந்த கிரீமை வழக்கமாகப் பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொண்டால், சிறிது நேரத்துக்க பிறகு உங்கள் முகத்தில் உள்ள புள்ளிகளில் வித்தியாசத்தைக் காண்பீர்கள். அதே நேரத்தில், இந்த க்ரீமின் விளைவு உங்கள் கைகள் மற்றும் கால்களை டானிங் செய்வதிலும் காணப்படுகிறது.

உருளைக்கிழங்கு கிரீம் தயாரிக்கும் முறை

ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோள்களை உரித்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வடிகட்டி அல்லது உங்கள் கைகளின் உதவியுடன், அறைபட்ட உருளைக்கிழங்கில் இருந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுக்கவும்.

இப்போது இந்த உருளைக்கிழங்கு சாற்றில் மூன்று முதல் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

மேலும், ஒரு கற்றாழை ஜெல் அல்லது வைட்டமின் ஈ காப்ஸ்யூலை உடைத்து அதன் ஜெல் சேர்க்கவும். சிறிது காபி பவுடரைச் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தடிமனான பேஸ்ட்டை மெல்லியதாக மாற்ற சிறிது ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும்.

அனைத்தையும் நன்றாகக் கலந்து, டானிங் தெரியும் இடங்களில் உங்கள் கைகள் மற்றும் கால்களில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவவும். இந்த இயற்கையான க்ரீமை வாரத்துக்கு மூன்று முதல் நான்கு முறை முகம், கை மற்றும் கால்களில் தடவுவது உங்கள் முகத்திலும், கை மற்றும் கால்களிலும் இயற்கையான பளபளப்பைப் பராமரிக்கும். அத்துடன் டானிங் வெகுவாக குறையும்.

உருளை கிழங்கு க்ரீம் பலன்கள்

உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. அவை சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவுகின்றன. அதே நேரத்தில், கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவுகின்றன.

எனவே, இந்த க்ரீம் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு க்ரீம் தயாரிப்பதற்கான செலவு என்பது மிக குறைவாக இருப்பதோடு, பலன்கள் நிறைவானதாக இருக்கும்.