மஹாராஷ்ட்ரா தேச்சா : சப்பாத்தி, ரொட்டி, சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்; மஹாராஷ்ட்ராவின் தேச்சா ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மஹாராஷ்ட்ரா தேச்சா : சப்பாத்தி, ரொட்டி, சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்; மஹாராஷ்ட்ராவின் தேச்சா ரெசிபி!

மஹாராஷ்ட்ரா தேச்சா : சப்பாத்தி, ரொட்டி, சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்; மஹாராஷ்ட்ராவின் தேச்சா ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published Mar 10, 2025 02:23 PM IST

மஹாராஷ்ட்ரா தேச்சா : தேச்சா ரெசிபி இதை இடி சம்பல் என தமிழில் அழைக்கலாம். இது ஒரு சைட்டிஷ் ரெசிபியாகும். மஹாராஷ்ட்ராவின் புகழ்பெற்ற ரெசிபி. இதைச் செய்வது எப்படி என பாருங்கள்.

மஹாராஷ்ட்ரா தேச்சா : சப்பாத்தி, ரொட்டி, சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்; மஹாராஷ்ட்ராவின் தேச்சா ரெசிபி!
மஹாராஷ்ட்ரா தேச்சா : சப்பாத்தி, ரொட்டி, சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்; மஹாராஷ்ட்ராவின் தேச்சா ரெசிபி! (Simply Tadka)

தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 2 (தேவைக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்)

• பூண்டு – 8 பல்

• நிலக்கடலை – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• மல்லித்தழை – சிறிது

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – அரை ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

• பூண்டை தோல் உறித்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்தது அது சூடானவுடன் அதில் சீரகம் சேர்க்கவேண்டும். சீரகம் பொரிந்தவுடன், அதில் பச்சை மிளகாய், பூண்டு, கடலை, உப்பு மற்றும் மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வதக்கவேண்டும்.

• இதை அடுப்பில் இருந்து எடுத்து ஆறியவுடன் உரலில் சேர்த்து தட்டிக்கொள்ளவேண்டும். கொரகொரப்பாகத்தான் இருக்கவேண்டும். உரல் இல்லாவிட்டால் மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளலாம்.

• ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து சேர்த்து அவை பொரிந்தவுடன் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவேண்டும். இந்த தாளிப்பை இடித்து வைத்துள்ள தேச்சாவில் சேர்த்து கலந்து, சூடான சாதத்தில் சேர்த்து பிரட்டி சாப்பிட சுவை அள்ளும்.

• இதை பூரி, இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, பரோட்டகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை நமமு ஊரில் இடி சம்பல் என்று அழைப்பார்கள். இதற்கு மஹாராஷ்ட்ராவில் தேச்சா என்று பெயர். இது ஒரு மஹாராஷ்ட்ரா ரெசிபியாகும்.

இது வித்யாசமான சுவை கொண்ட ரெசிபியாக இருக்கும். இதை உங்கள் விட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு சைட்டிஷ் ரெசிபியாகும். இதை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். விருந்துகளில் பரிமாற கூடுதல் சைட்டிஷ் ரெசிபியாக இதை பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே இதை நீங்கள் இதை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இதைச் செய்வதும் எளிது என்பதால், சைட்டிஷ் செய்ய நேரமில்லாத காலத்தில் கடகடவென செய்துவிட்டு வேலையை முடித்தும் விடலாம்.