தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Madurai Mutton Kola : மணமணக்கும் மதுரை மட்டன் கோலா உருண்டை! இப்டி ஒரு பக்குவத்தில் செய்தால் தினமும் ருசிக்க தூண்டும்!

Madurai Mutton Kola : மணமணக்கும் மதுரை மட்டன் கோலா உருண்டை! இப்டி ஒரு பக்குவத்தில் செய்தால் தினமும் ருசிக்க தூண்டும்!

Priyadarshini R HT Tamil
May 14, 2024 07:12 AM IST

Madurai Mutton Kola : மணமணக்கும் மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Madurai Mutton Kola : மணமணக்கும் மதுரை மட்டன் கோலா உருண்டை! இப்டி ஒரு பக்குவத்தில் செய்தால் தினமும் ருசிக்க தூண்டும்!
Madurai Mutton Kola : மணமணக்கும் மதுரை மட்டன் கோலா உருண்டை! இப்டி ஒரு பக்குவத்தில் செய்தால் தினமும் ருசிக்க தூண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

மட்டன் -கால் கிலோ

பொட்டுக்கடலை – கால் கப் (பொடித்தது)

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

பட்டை – 1

கிராம்பு – 2

சோம்பு – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

சின்னவெங்காயம் – 10

இஞ்சி – பூண்டு விழுது – 1 ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

மட்டன் வேகவைக்க தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வதற்கு, முதலில் ஒரு குக்கரில் சுத்தம் செய்த மட்டன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு என வேகவைக்க கொடுத்திருக்கும் பொருட்களை சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து போதிய விசில்கள் விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து அரைக்கவேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். காய்ந்த மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த மட்டன் கலவையில் உருண்டை பிடிப்பதற்கு தேவையான அளவு பொட்டுக்கடலை சேர்த்து பிசைந்துகொள்ள வேண்டும். உருண்டை உடைந்தால் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

சிறிய உருண்டைகளாக உருட்டி, கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும்.

குறிப்புகள்

மட்டனை சிறிய துண்டுகளாக்கியோ அல்லது கொத்தியோ சேர்த்துக்கொண்டால் நல்ல மிருதுவாக வெந்து சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும்.

மட்டன் வேக வைத்த நீரை நாம் கோலா உருண்டைக்கு பயன்படுத்த மாட்டோம் என்பதால், அதில் சிறிது மல்லித்தழைகள் தூவி குழந்தைகளுக்கு சூப்பாக பருகக்கொடுக்கலாம். சூப்பரான சுவையில் அசத்தும்.

இந்த மட்டன் கோலா உருண்டை வயதானவர்களுக்கு சிறந்தது. அவர்களுக்கு பற்கள் வலுவற்றதாக இருந்தால், இது கடித்து சாப்பிட எளிதாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதை உருண்டைகளாக்கி பொரித்து எடுத்தால், மட்டன் கோலா உருண்டையை சைட்டிஷ் அல்லது ஸ்டாட்டர் ஆக பயன்படுத்தலாம். இதே உருண்டைகளை பொரிக்காமல் குழம்பில் சேர்த்தால் மட்டன் கோலா உருண்டை குழம்பு தயாராகிவிடும்.

மேலும் ஷ்யாம் கூறுகையில், ‘இந்த மட்டன் என்பது ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று கூறலாம். மட்டனில் உள்ள சிங்க் சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி12 நரம்பு இயக்கத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் ரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மட்டனில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதனால் நீங்கள் வழக்கமாக மட்டன் எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது. இதனால் அனீமியாவும் தடுக்கப்படுகிறது. எனவே மட்டன் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதால், இதை உங்கள் உணயில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

WhatsApp channel

டாபிக்ஸ்