Madurai Mutton Dosai : நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்! மதுரை ஸ்பெஷல் கறி தோசை! மட்டன் கீமா வைத்து சாப்பிட சுவை அள்ளும்!
Madurai Mutton Dosai : நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்! மதுரை ஸ்பெஷல் கறி தோசை! மட்டன் கீமா வைத்து சாப்பிட சுவை அள்ளும்!
மதுரையில் மட்டன் கறி தோசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதுரையில் அசைவ உணவுகளே மிகவும் புகழ்பெற்றவை. இந்த கறிதோசை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதை மதுரையில் சுவைப்பதற்கு வெளியூரில் இருந்து எல்லாம் மக்கள் வருவார்கள். இது அவ்வளவு சுவை நிறைந்த ஒன்று.
கீமா மசாலா செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கல் உப்பு – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
மிளகு தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
மட்டன் கீமா - 500 கிராம்
கறி தோசை செய்ய தேவையான பொருட்கள்
தோசை மாவு – 6 கப்
மட்டன் கீமா மசாலா
கொத்துமல்லி இலை – கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய்
செய்முறை
கறி தோசை செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடிவைத்து வேகவிடவேண்டும்.
20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்த ஒரு தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவேண்டும்.
அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவேண்டும். இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி வேகவிடவேண்டும்.
சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார். இதற்கு தனியாக சைட்டிஷ் எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் எந்த அசைவ குழம்பையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
மதுரைக்கு வருபவர்கள் முதலில் சுவைக்க வேண்டும் என்று நினைப்பது இந்த கறிதோசைதான். மேலும் சில அசைவ உணவுகளையும் மதுரைக்கு வருபவர்கள் ரசித்து, ருசித்து உண்பார்கள்.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்