தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Madurai Jasmine Rate Hikes To Rs 3500 Per Kg

Madurai Jasmine Rate: வாசத்தோடு சேர்த்து ஆளையும் தூக்குது மதுரை மல்லிகை விலை!

I Jayachandran HT Tamil
Dec 03, 2022 05:59 PM IST

மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை ஜாதி மல்லிகைப் பூ
மதுரை ஜாதி மல்லிகைப் பூ

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேல் இங்கு பூக்கள் விற்பனையாகின்றன. குறிப்பாக ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு என்ற அந்தஸ்தைப் பெற்ற மதுரை மல்லிகை, மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் இருப்பதால், மதுரை விமான நிலையம் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று கிலோ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சிப்பூ ரூ.1500, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.80, பட்டன் ரோஸ் ரூ.250 உட்பட பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'இந்த ஆண்டின் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதாலும், தொடர்ந்து பெரிய கார்த்திகை திருவிழா என்பதாலும் பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது. இதே விலை அடுத்த சில நாட்கள் நீடிக்கும்' என்றார்.

WhatsApp channel