மதுரை கறி தோசை சால்னா; பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல; சாப்பிட்டு பாருங்கள் அசத்தலாக இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மதுரை கறி தோசை சால்னா; பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல; சாப்பிட்டு பாருங்கள் அசத்தலாக இருக்கும்!

மதுரை கறி தோசை சால்னா; பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல; சாப்பிட்டு பாருங்கள் அசத்தலாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Dec 23, 2024 01:53 PM IST

மதுரை கறி தோசை சால்னா செய்வது எப்படி என்று பாருங்கள்.

மதுரை கறி தோசை சால்னா; பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல; சாப்பிட்டு பாருங்கள் அசத்தலாக இருக்கும்!
மதுரை கறி தோசை சால்னா; பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல; சாப்பிட்டு பாருங்கள் அசத்தலாக இருக்கும்!

துவரம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒன்றரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒன்றரை ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான அளவு

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கசகசா – கால் ஸ்பூன்

முந்திரி குருணை – 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 3 ஸ்பூன்

ஏலக்காய் – 2

கல்பாசி – கால் ஸ்பூன்

பட்டை – அரை இன்ச்

பிரியாணி இலை – 1

(மட்டன் துண்டுகள் மற்றும் துவரம் பருப்பை கழுவி தனித் தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்)

செய்முறை

அரைக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன், தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து அதில் மஞ்சள், மிளகாய், மல்லித் தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒன்று சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் அதில் கழுவி வைத்துள்ள மட்டன் சேர்த்து சிறிது நேரம் கிளறி, இதில் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 8 விசில்கள் வரும் வரை வேகவிடவேண்டும். பின்னர் பின்பு இறக்கி வைத்து குக்கரை திறந்து நன்றாக கிளறி மீண்டும் குக்கரை மூடாமல் 2 நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

அது கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசம் போக குழம்பை நன்றாக ஒரு கொதி திரண்டதும் இறக்கி, மல்லித்தழைகள் தூவினால், ருசியான கமகம மதுரை கறிதோசை சால்னா தயார். கறி தோசைக்கு சால்னாவை கெட்டியாக வைக்கவேண்டும். கறி தோசைக்கு கறித்துண்டு இன்றி வெறும் குழம்பு மட்டும் போதும்.

குறிப்பு –

முந்திரிக் குருணை இல்லாவிட்டால் வறுத்த தோல் நீக்கிய நிலக்கடலை சேர்க்கவேண்டும். இங்கு கொடுத்துள்ள செய்முறை அதிக காரம் இல்லாதது. கறி தோசைக்கு இந்த சால்னாவை வைத்தால் மிளகு, மிளகாய் தூள், பச்சை மிளகாய் அளவை 2 முதல் 3 மடங்கு உயர்த்திக் கொள்ளவேண்டும்.

இதே செய்முறையில் செய்தால், கறி தோசைக்கு மட்டுமின்றி இட்லி, தோசை, ஆப்பம் இடியாப்பம் புரோட்டா, சப்பாத்திக்கும் இந்த சால்னா நன்றாக இருக்கம். இட்லி மட்டும் கொதிக்க கொதிக்க மென்மையாக கொடுத்துவிட்டால் இந்த சால்னாவுடன் ஒரு டஜன் இட்லியை ஒவ்வொருவரும் சாப்பிடுவார்கள்.

கடைக்கு இந்த சால்னா வைப்பது எனில் 4 பச்சை மிளகாயை நான்காகக் கீறி இதில் வதக்கி சேர்க்கவேண்டும். இந்த பச்சை மிளகாய் கால் கிலோ அளவுக்குத்தான். உங்கள் கடையின் உணவு விலையைப் பொறுத்து முந்திரிக் குருணை சேர்க்கவும். இல்லாவிட்டால் நிலக்கடலையே போதும்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.