கடும் காற்று மாசால் பாழாகும் நுரையீரல் - சுத்தம் செய்ய இந்த 6 பானங்கள் உதவும்! ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்!
நுரையீரலை சுத்தம் செய்யும் பானங்கள் எவை?
கடும் காற்று மாசுபட்டால் பாழாகும் உங்களின் நுரையீரலை, இந்த 6 கழிவுநீக்க பானங்கள் பருகும்போது சுத்தமாக்கும். குறிப்பாக காற்று மாசு காலங்களில் இந்த பானங்கள் மட்டும் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்யும். காற்று மாசுபாடு உங்கள் நுரையீரலை பாதிக்கும். நீங்கள் சுத்தமில்லாத நச்சுகளும், தூசிகளும் கலந்த காற்றை சுவாசிப்பதால், உங்களின் நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நீங்கள் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதற்கு இந்த 6 பானங்கள் உதவும்.
சூடான எலுமிச்சை தண்ணீர்
உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க ஒரு சிறந்த வழியாக எலுமிச்சை தண்ணீர் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்கும். இது உங்கள் உடலில் உள்ள அமில அளவைக் சமமாக்கும்.
இஞ்சி மற்றும் தேன் டீ
இஞ்சி மற்றும் தேனீல் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் சளியை போக்கும் தன்மை கொண்டவை. இது உங்கள் சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் தொண்டைக்கு இதமளிக்கிறது. குறிப்பாக கடும் காற்று மாசில் இருந்து உங்கள் சுவாச மண்டலத்தை காக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் இரண்டும் உள்ளது. இது உங்களின் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். இது உங்கள் உடலில் உள்ள ஆபத்துக்களை ஏற்படுததும் நச்சுக்களை அகற்றும். இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பீட்ரூட் சாறு உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இது உங்கள் நுரையீரல் இயக்கத்தை அதிகரிக்கும். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும். காற்று மாசையும் எதிர்த்து போராடும் திறன் கொண்டது.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடரி வினிகள் உங்கள் உடலில் அமில அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் நுரையீரலில் உள்ள நச்சுக்களைப் போக்க உதவுகிறது. இதை நீங்கள் தண்ணீரில் கலந்து பருகும்போது, அது உங்கள் நுரையீரலை சுத்தம் செய்கிறது. மேலும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
இஞ்சி-மஞ்சள் தேநீர்
கால் இன்ச் இஞ்சி தட்டி, கால் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. அதில் ஒன்று சுவாச மண்டல ஆரோக்கியது. மஞ்சளில் உள்ள குர்குமின்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் நுரையீரலுக்கு ஏற்றது மற்றும் ஃப்ர ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உங்களுக்கு தொண்டை கட்டிகொள்ளும்போது, அதை சரிசெய்ய இஞ்சியை பயன்படுத்துங்கள். காற்று மாசில் இருந்து உங்கள் சுவாச மண்டலத்தை காக்க சிறந்த நிவாரணி இஞ்சிதான்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்