Lung Detox : புகையால் பாலான நுரையீரல், கட்டிக்கொண்ட கபம்! இதோ சுத்தம் செய்ய இத்தனை பானங்கள்!
Lung Detox : புகையால் பாலான நுரையீரல், கட்டிக்கொண்ட கபம் என உங்கள் நுரையீரல் துன்புறுகிறதா? இதோ சுத்தம் செய்ய உதவும் இத்தனை பானங்களையும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரம் சிறிய இடைவெளிவிட்டு எடுத்து பலன்பெறுங்கள்.
உங்கள் நுரையீரலை இயற்கை முறையில் சுத்தம் செய்ய வேண்டுமெனில் அதற்கு உதவும் பானங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டும் உலக நுரையீரல் நாளில் நுரையீரல் பாதுகாப்பு குறித்த வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல் நம் உடலில் உள்ள முக்கிய பாகங்களுள் ஒன்று. அதுதான் சுவாசிக்க உதவுகிறது. அது சுத்தமாக இருந்தால் நமது உடலுக்கு சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதேநேரத்தில் விரைவில் பாதிக்கப்படும் ஒன்றாகவும் உள்ளது. காரணம் புகை, மாசு மேலும் புகைப்பழக்கம் ஆகியவை ஆகும். அவற்றை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது உங்கள் முழு உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏனெனில் சுவாசிக்க முடியாவிட்டால் உங்கள் உடலுக்கு என்னவாகும் தெரியுமா? அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்களின் நுரையீரலை சுத்தப்படுத்தும் ஆயுர்வேத பானங்கள் மற்றும் மூலிகை பானங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அது உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மஞ்சள் பால்
மஞ்சளை பாலில் கலந்து இளஞ்சூட்டில் பருகவேண்டும். தேன் தேவைப்பட்டால் அதையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இந்த பானத்தை உறங்கச்செல்லும் முன் பருகவேண்டும். இது உங்கள் நுரையீரலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். நீங்கள் உறங்கும்போது உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்கும். இதை பருகுவதற்கு சிறந்த நேரம் என்றால் அது இரவில் உறங்கச் செல்லும் முன்னர்தான். வேறு நேரங்களில் பருகுவதும் நல்லதல்ல.
இஞ்சி டீ
கால் இன்ச் இஞ்சியை எடுத்து துருவி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிடவேண்டும். அதை வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகவேண்டும். இஞ்சியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது. இதை காலையில் அல்லது சாப்பிட்ட பின்னர் பருகுவது நல்லது.
துளசி தேநீர்
10 முதல் 15 துளசி இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிடவேண்டும். அதை வடித்து தேன் கலந்து பருகவேண்டும். துளசி சளியால் ஏற்படும் அடைப்புகளைப் போக்கும் தன்மைகொண்டது. இது உங்களுக்கு சளியை வெளியேற்றவும், உங்களின் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இதையும் நீங்கள் அதிகாலையில் அல்லது மதிய உணவுக்குப்பின்னர் பருகலாம்.
புதினா டீ
ஒரு கைப்பிடி புதினா இலைகளை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேன் அல்லது இந்துப்பு கலந்து பருகலாம். இது உங்களின் சுவாசப்பாதைகளை சுத்தம் செய்யும். நுரையீரலில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். இந்த பானத்தை நீங்கள் உணவுக்குப்பின் அல்லது மாலையில் பருகுதல் நலம் தரும்.
அதிமதுரம் டீ
அதிமதுரத்தை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி அளவாக எடுத்து 10 நிமடங்கள் தண்ணீரில் கொதிக்கவிட்டு அதை பருகலாம். தேவைப்பட்டால் இதனுடன் தேன் கலந்துகொள்ளலாம். இது உங்கள் சுவாசப்பாதைகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். சளி உருவாவதைத் தடுக்கும். ஒரு நாளில் ஒருமுறை மட்டும் பருகலாம் குறிப்பாக மதிய வேளைகளில் மட்டும் பருகவேண்டும்.
வெந்தயத்தண்ணீர்
வெந்தயத்தின் தண்ணீரை ஓரிரவு ஊறவைத்தும் பருகலாம். அது உங்கள் ஒடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதுவும் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது சளி மற்றும் மூக்கடைப்புகள் ஆகிய பிரச்னைகளை சரிப்படுத்துகிறது. இதை நீங்கள் எப்போது காலையில் எழுந்தவுடக் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது.
பட்டை தேன் டீ
கொதிக்கும் தண்ணீரில் பட்டையை 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும். அப்படி ஊறவைக்கும்போது அதன் சாறு அனைத்தும் தண்ணீரில் இறங்கிவிடும். இப்போது வடிகட்டி அதில் தேன் கலந்து பருகவேண்டும். இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது நுரையீரலை இயற்கையில் சுத்தப்படுத்தச் செய்கிறது. இது உங்களுக்கு காலையில் பருக ஏதுவான காலை பானமாகும் அல்லது இரவு உறங்கச் செல்லும் முன்னரும் பருகலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்
தேன் கலந்த எலுமிச்சை சாறில் சூடான தண்ணீரை ஊற்றி பருகினால், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் நுரையீரல் கழிவுகள் அகல உதவுகிறது. தேன் உங்கள் சுவாசப்பாதைகளை இதமாக்குகிறது. எனவே இதை காலையில் தினமும் முதலில் பருகிவிட்டால், அது உங்களின் நுரையீரலை சுத்தம் செய்யும் பானங்களுள் ஒன்றாகும்.
பீட்ரூட் சாறு
பீட்ரூடை அடித்து வடிகட்டி அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகினால், உங்களுக்கு நாள் முழுமைக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதை நீங்கள் காலையில், மதியம் என எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
ஓமம் தண்ணீர்
கால் ஸ்பூன் ஓமத்தை 10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்தோ அல்லது கலக்காமலோ பருகினால், அது உங்கள் நுரையீரலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மைகொண்டது. காலையில் இதை செய்துவிட்டால் நீங்கள் குளிக்கும்போது அது சளியை வெளியேற்றிவிடும். இதனால் உங்கள் சுவாசம் எளிதாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்