Lung Detox : நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும்! வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த பானம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Lung Detox : நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும்! வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த பானம்!

Lung Detox : நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும்! வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த பானம்!

Priyadarshini R HT Tamil
May 24, 2024 12:24 AM IST

Lung Detox : நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும். நாள்பட்ட சளித்தொல்லைக்கு தீர்வு. வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த மூலிகை தேநீரை பருகவேண்டும்.

Lung Detox : நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும்! வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த பானம்!
Lung Detox : நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும்! வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த பானம்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

சளி மற்றும் வறட்டு இருமல் பிரச்னைகளால் பலரும் இன்று எப்போதும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எளிய வீட்டு முறை தீர்வு உள்ளது. அதுதான் இந்த மூலிகை தேநீர். இதை அனைத்து வயதினரும் பருகலாம். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. பெரியவர்கள் 100 மிலிட்டரும், குழந்தைகளுக்கு 50 மிலிட்டரும் பருகக்கொடுக்கவேண்டும்.

தேவையான பொருட்கள்

பட்டை – 1 இன்ச்

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

இஞ்சி – 5 கிராம் (தோல் நீக்கி, அலசி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

மிளகு – 5

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

தேன் – ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

செய்முறை

அரை லிட்டர் தண்ணீரில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

தண்ணீர் பாதியளவு சுண்டும் வரை கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதை வடிகட்டி சூடாக இருக்கும்போதே மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

பின்னர் இதை இளஞ்சூடாக பருகவேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. காலையில் டீ, காபி எதுவும் பருகாமல் இதை மட்டும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பருகவேண்டும்.

நீங்கள் விருப்பப்பட்டால் வடிகட்டுவதற்கு முன் சூடாக இறக்கியவுடன் இரண்டு புதினா இலைகளை மட்டும் சேர்த்து சிறிது நேரம் கழித்தும் வடிகட்டலாம். இது முற்றிலும் நீங்கள் விருப்பப்ட்டால் செய்துகொள்ளலாம்.

புதினா டீக்கு கூடுதல் சுவை மற்றும் புத்துணர்ச்சியையும் தரும். அப்படி பருகும்போது, நாள்பட்ட நுரையீரல் சளி மற்றும் நெஞ்சுசளியை கரைத்து வாய்வழியாக வெளியேற்றிவிடும். வறட்டு இருமலைப்போக்கும்.

அதிகமான சளித்தொல்லையால் மூச்சு விட சிரமப்படுபவர்கள் இதை பருகுவதன் மூலம் பலன்பெறுவார்கள். வாரத்தில் 2 முறை இதை பருகினால் போதும். உங்களுக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.