Lung Care : நுரையீரலில் தங்கியுள்ள நாள்பட்ட சளியை அடித்து விரட்ட வேண்டுமா? இந்த ஒரு டீ போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Lung Care : நுரையீரலில் தங்கியுள்ள நாள்பட்ட சளியை அடித்து விரட்ட வேண்டுமா? இந்த ஒரு டீ போதும்!

Lung Care : நுரையீரலில் தங்கியுள்ள நாள்பட்ட சளியை அடித்து விரட்ட வேண்டுமா? இந்த ஒரு டீ போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 07:05 PM IST

Lung Care : சளி, இருமல், நுரையீரலில் தங்கியுள்ள நாள்பட்ட சளி, காய்ச்சல் ஆகியவற்றை அடித்து விரட்ட வேண்டுமா? அதற்கு இந்த ஒரு தேநீர் போதும்.

Lung Care : நுரையீரலில் தங்கியுள்ள நாள்பட்ட சளியை அடித்து விரட்ட வேண்டுமா? இந்த ஒரு டீ போதும்!
Lung Care : நுரையீரலில் தங்கியுள்ள நாள்பட்ட சளியை அடித்து விரட்ட வேண்டுமா? இந்த ஒரு டீ போதும்!

தேவையான பொருட்கள்

கொய்யா இலை – சிறிதளவு

கொய்யா இலை கிடைக்கவில்லையென்றால், கொய்யப்பழம் விற்கும் கடைகளிலே கொய்யா இலைகளுடன் சேர்த்துதான் பழத்தை வைத்திருப்பார்கள். அங்கிருந்தும் வாங்கிகொள்ளலாம்.

கொய்யா இலையில் இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் என பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவையனைத்தும் உடலுக்கு தேவையானவை. மேலும் கொய்யா இலையில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன் நமது உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இது நமது உடலில் கிருமிகளை தங்கவிடாது. ஏற்கனவே உள்ள கிருமிகளையும் அடித்து விரட்டும் தன்மையும் கொய்யா இலைக்கு உண்டு.

நாம் பொதுவாக சளிக்கு துளசி, ஓமவல்லி, தூதுவளை போன்ற இலைகளை மட்டும் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கொய்யா இலைகளை ஒருமுறை பயன்படுத்தினால் அது சளி, இருமல் மற்றும் காய்ச்சலை அடித்து விரட்டும் தன்மை கொண்டது. மிகுந்த ஆற்றல் நிறைந்தது கொய்யா இலைகள்.

இஞ்சி – சிறிதளவு

மிளகு – 3

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

இந்த பொருட்கள் அனைத்துமே சளி மற்றும் இருமலுக்கு எதிரானவை. மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை.

பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்

(தொண்டை கரகரப்பை சரிசெய்யக்கூடியது)

தேநீர் தயாரிக்கும் முறை

கொய்யா இலைகளின் நடுவில் உள்ள நரம்புகளை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீருடன் கொய்ய இலைகளை சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

ஒரு உரலில் இஞ்சி, மிளகு, கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்றாக நைத்துக்கொள்ள வேண்டும்.

கொய்யா இலைகள் நன்றாக கொதித்து, அதன் நிறம் மாறியதும், நைத்து வைத்துள்ளவற்றையும் அதில் சேர்க்க வேண்டும்.

அது 2 நிமிடங்கள் கொதித்த பின், பனங்கற்கண்டு சேர்த்து இறக்க அடுப்பை அணைத்து அப்படியே சிறிது நேரம் வைக்க வேண்டும்.

அப்போதுதான் பனங்கற்கண்டு கரையும். தேநீர் மிதமான சூட்டை அடைந்தவுடன். அதை வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

இதை மிதமான சூட்டில் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் என்றால், பனங்கற்கண்டை தவிர்க்கலாம். குறிப்பாக சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் இதை பருகினால் உடனடியாகவே உடல் வியர்த்து, சளி, இருமல் குறையும்.

ஒரு நாளில் 2 வேளை 3 நாட்கள் குடித்தால் நுரையீரலில் தங்கியுள்ள சளி கரைந்து முற்றிலுமாக வெளியேறிவிடும். இந்த பயனுள்ள குறிப்பை பின்பற்றி கட்டாயம் பயன்பெறுங்கள். ஆரோக்கிய வாழ்வு வாழ நாங்கள் அன்றாடம் பகிரும் குறிப்புக்களை பயன்படுத்துங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.