தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Lunch Box Recipe Lunch Box Recipe That Makes You Taste Delicious Tomato Rice; Egg Fry

Lunch Box Recipe : உச்சுக்கொட்டி சுவைக்கத் தூண்டும் லன்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதம்; முட்டை ஃப்ரை!

Priyadarshini R HT Tamil
Feb 13, 2024 09:57 AM IST

Lunch Box Recipe : உச்சுக்கொட்டி சுவைக்கத் தூண்டும் லன்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதம்; முட்டை ஃப்ரை!

Lunch Box Recipe : உச்சுக்கொட்டி சுவைக்கத் தூண்டும் லன்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதம்; முட்டை ஃப்ரை!
Lunch Box Recipe : உச்சுக்கொட்டி சுவைக்கத் தூண்டும் லன்ச் பாக்ஸ் ரெசிபி! தக்காளி சாதம்; முட்டை ஃப்ரை!

ட்ரெண்டிங் செய்திகள்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை ஒரு துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 3

அன்னாசிப்பூ – 1

பிரியாணி இலை – 1

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 3 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு

செய்முறை

முதலில் அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து கலந்து, அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்து கலந்து, அதில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவேண்டும்.

பின்னர் தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி ஒரு விசில் விடவேண்டும். பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிடவேண்டும்.

தக்காளி சாதம் தயார்.

முட்டை ஃப்ரை

தேவையான பொருட்கள்

முட்டை – 6

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு – 5 பற்கள் தட்டியது

பெரிய வெங்காயம் – 1 (மெல்லிதாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகுத் தூள் – அரை ஸ்பூன்

சீரகத் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் முட்டைகளை சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.

முட்டை வெந்ததும், ஆறவிட்டு, உரித்து வைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன், அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பச்சை வாசனை போனதும், இதில் முட்டைகளை சேர்க்க வேண்டும்.

முட்டைகளை 2 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

இறுதியில் கறிவேப்பில்லை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.

கார சாரமான முட்டை ப்ரை தயார்.

இது சரியான லஞ்ச் காம்போ. குறிப்பாக லஞ்ச் பாக்ஸில் வைத்து கட்டிக்கொடுக்க இது மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த தக்காளி சாதம், முட்டை ஃப்ரை லன்ச் காம்போ இருக்கும்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்