Lunch Box Masala Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்யவேண்டுமா? இதோ இந்த மசாலா சாதம் மட்டும் போதும்!-lunch box masala rice want to empty your lunch box without leaving any leftovers this masala rice alone is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Lunch Box Masala Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்யவேண்டுமா? இதோ இந்த மசாலா சாதம் மட்டும் போதும்!

Lunch Box Masala Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்யவேண்டுமா? இதோ இந்த மசாலா சாதம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 28, 2024 01:39 PM IST

Lunch Box Masala Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்யவேண்டுமா? இதோ இந்த மசாலா சாதம் மட்டும் போதும். முட்டையில் செய்வதால் எண்ணற்ற ஆரோக்கியமும் கிட்டும்.

Lunch Box Masala Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்யவேண்டுமா? இதோ இந்த மசாலா சாதம் மட்டும் போதும்!
Lunch Box Masala Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்யவேண்டுமா? இதோ இந்த மசாலா சாதம் மட்டும் போதும்!

தேவையான பொருட்கள்

வேக வைத்த சாதம் – ஒரு கப்

முட்டை – 6 (வேகவைத்து, ஓட்டை நீக்கிவிட்டு, மஞ்சள் கருவை எடுத்துவிட்டு, வெந்த வெள்ளை பாகத்தை மட்டும் நீள துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

முழு கரம் மசாலா

பட்டை – 1

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது அல்லது மசித்தது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லி – கைப்பிடியளவு

செய்முறை

சாதத்தை முதலில் வேகவைத்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவேண்டும்

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிக்கொள்ளவேண்டும். தக்காளியை அடித்தோ அல்லது துருவியோ சேர்த்தால் தண்ணீர் தேவைப்படாது. அதில் உள்ள ஈரப்பதமே போதுமானதாக இருக்கும். நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

அருகில் மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெட்டிய முட்டை துண்டுகளை சேர்த்து சிறிது டாஸ் செய்து, இந்த மசாலாவில் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அடுத்து நறுக்கிய மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டால் சூப்பர் சுவையில் முட்டை மசாலா சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை ரைத்தா மட்டுமே போதும்.

இதை உங்கள் குழந்தையின் லன்ச் பாக்ஸில் வைத்துவிட்டால் போதும். அவர்கள் சாப்பிட்டு மகிழ்வார்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். அவர்களுக்கு இதனுடன் கேரட் துருவல் மற்றும் வெள்ளரி ரைத்தா வைத்து கொடுத்துவிடுங்கள். அனைத்தும் காலியாகிவிடும் அல்லது உருளைக்கிழங்கு வறுவலும் சூப்பர் ஜோடிதான். குழந்தைகளுக்கும் பிடித்தது.

இதுபோன்ற எண்ணற்ற சுவை மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.