கர்ப்ப கால ஹீமோகுளோபின் குறைவு; ஒரே மாதத்தில் உயர எளிய 5 டிப்ஸ்கள் – சித்த மருத்துவர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கர்ப்ப கால ஹீமோகுளோபின் குறைவு; ஒரே மாதத்தில் உயர எளிய 5 டிப்ஸ்கள் – சித்த மருத்துவர் விளக்கம்!

கர்ப்ப கால ஹீமோகுளோபின் குறைவு; ஒரே மாதத்தில் உயர எளிய 5 டிப்ஸ்கள் – சித்த மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Jan 20, 2025 12:46 PM IST

கர்ப்ப கால ரத்த சோகையைப் போக்கும் எளிய வழிகளாக சித்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

கர்ப்ப கால ஹீமோகுளோபின் குறைவு; ஒரே மாதத்தில் உயர எளிய 5 டிப்ஸ்கள் – சித்த மருத்துவர் விளக்கம்!
கர்ப்ப கால ஹீமோகுளோபின் குறைவு; ஒரே மாதத்தில் உயர எளிய 5 டிப்ஸ்கள் – சித்த மருத்துவர் விளக்கம்!

நமது உடலில் ஹீமோகுளோபினின் பொதுவான அளவு என்ன?

ஆண்கள் உடலில் பொதுவாக 14 முதல் 17.5 வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.3 முதல் 15.3 வரை இருக்க வேண்டும். 13.5க்கு கீழ் குறைந்தால் ஆண்களுக்கு ஆபத்து. 12க்கு கீழ் குறைந்தால் பெண்களுக்கு ஆபத்து.

எதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது?

உங்கள் உடலால் போதிய அளவு ரத்தச்சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. உங்கள் உடல் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து உங்கள் உடல் ரத்த சிவப்பணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.

சில நேரங்களில் உங்கள் எலும்பு மஜ்ஜைகள், போதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியாமல்போனால் உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

உங்கள் உடல் தேவையான அளவு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அது அழிந்துவிடுகிறது. மீண்டும் உற்பத்தி செய்வதற்கு இணையாக அது உடலில் இருக்க முடியாமல் போவதால் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

விபத்து உள்ளிட்ட காரணங்களில் உடலில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால், ரத்தம் இழக்கும்போது, உங்கள் உடலில் இரும்புச்சத்தும் குறைகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைகிறது.

உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதனால் ரத்த அல்சர் ஏற்படுகிறது.

உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியாது. இதனால், உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.

வைட்டமின் பி12, பி9 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் உடலுக்கு கிடைக்காவிட்டாலும் உடலில் ரத்தசிவப்பணுக்கள் குறையும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும் மிகவும் பொதுவான கோளாறுதான். ஹீமோகுளோபின் குறைந்தால் பிரசவத்தில் சிரமம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் பெண்களும், அவர்களின் வீட்டில் உள்ளவர்களும் பயப்படுவார்கள். ஆனால் அதை எளிதாக நீங்கள் கடக்க முடியும். அதற்கு நீங்கள் பின்பற்றவேண்டிய 5 டிப்ஸ்கள் என்ன? இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கங்களில் சித்த மருத்துவர் காமராஜ் எளிய சித்த மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதோ அவர் கூறுவதைக் கேளுங்கள்.

மாதுளை மணப்பாகு

மாதுளை மணப்பாகு என்பது மாதுளைபழம், கற்கண்டு, தேன் கலந்து தயாரிக்கப்படும் சித்த மருந்து ஆகும். இதை நீங்கள் சித்த மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். இதை நீங்கள் தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் 15 மில்லி லிட்டர் ஆகாரத்திற்குப்பின்னர் பருகலாம். இதனால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை சாறு அல்லது கறிவேப்பிலை துவையல் செய்து சாப்பிட ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை அதன் ஈர்க்கு மற்றும் பூக்களுடன் சேர்த்து சூப் வைத்து தினமும் பருகலாம். அதிலும் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளலாம்.

பேரிட்சைப்பழம்

தினமும் 8 முதல் 10 பேரிட்சை பழங்களை சாப்பிடவேண்டும்.

சுவவெராட்டி

ஆட்டின் மண்ணீரல் என்ற உறுப்பு. இதை நீங்கள் தினமுமே சாப்பிடலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாம்.

இந்த 5 குறிப்புக்களையும் நீங்கள் தவறாமல் பின்பற்றும்போது, அது ஒரு மாதத்தில் 2 முதல் 4 அளவுக்கு ஹீமோகுளோபினை உயர்த்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.