Lose Bad Fats From Belly : உங்கள் தொப்பையில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க வேண்டுமா? காபி தூளும், எலுமிச்சையும் போதும்!
Lose Bad Fats From Belly : உங்கள் தொப்பையில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க வேண்டுமெனில், அதற்கு காபி தூளும், எலுமிச்சை பழமும் மட்டுமே போதும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதோ அதை வைத்து என்ன செய்யவேண்டும் பாருங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடல் பருமன் இன்று பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. பல வியாதிகளுக்கும் அதுதான் காரணமாகிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது.
அதற்காக தினமும் உடற்பயிற்சி கட்டாயம் மற்றும் சரிவிகித உணவுடன் நீங்கள் கொழுப்பை கரைக்கும் சில முறைகளையும் பின்பற்றினால் உடல் எடை குறைவதை நீங்கள் உறுதி செய்யலாம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை – 1
(எலுமிச்சையை நறுக்கி அதன் சாறை பிழிந்து தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சையின் தோலை நறுக்கி அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள ஏலை உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவித்து உடல் எடை குறைப்பை அதிகரிக்கிறது)
இஞ்சி – ஒரு இன்ச்
(தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சியில் உள்ள டெர்மோஜெனிக் உட்பொருட்கள் உங்கள் உடலின் கொழுப்பை கரைக்க உதவுகிறது)
காபி தூள் – அரை ஸ்பூன்
(உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும்)
சுருள் பட்டை – 1
செய்முறை
எலுமிச்சை பழத்தின் தோல், சுருள் பட்டை மற்றும் இஞ்சி துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதை பாதியாக சுண்ட வைத்துக்கொள்ளவேண்டும்.
அனைத்தும் நன்றாக வெந்தவுடன், அதை வடிகட்டி, அதில் ஏற்கனவே பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தின் சாறை அதில் கலந்துகொள்ளவேண்டும். கடைசியான இன்ஸ்டன்ட் காபித்தூள் சேர்த்து தினமும் காலையில் பருகவேண்டும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வழக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் காபியை தவிர்த்து இதுபோன்ற காபியை பருகவேண்டும்.
வெறும் வயிற்றில் பருகும்போது இதன் குணங்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. நீங்கள் முதலில் இதை பருகி வர உங்கள் உடலில் வித்யாசம் தெரியும். நீங்கள் விரும்பும் வரை இதை எடுத்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்