ஐந்தே நாட்களில் 2 கிலோ வரை எடை குறைப்பு? உணவியல் நிபுணர் பரிந்துரைக்கும் சாலட் இது தான்!
நீங்கள் உடல் எடையை குறைக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், ஆரோக்கியமான சாலட்களை சாப்பிடுவது உதவும். ஆனால், ‘5 நாட்களில் 2 கிலோ’ எடையைக் குறைக்க டயட்டீஷியன் ஒருவர் பரிந்துரைக்கும் இந்த சாலட்டை முயற்சி செய்து பார்க்கலாம்.

ஐந்தே நாட்களில் 2 கிலோ வரை எடை குறைப்பு? உணவியல் நிபுணர் பரிந்துரைக்கும் சாலட் இது தான்! (Pixabay)
உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாலட்களை உணவில் ஒரு பெரிய பகுதியாக மாற்றுவது உதவியாக இருக்கும். எடை இழப்பு பயணத்தின் போது பழங்கள் மற்றும் காய்கறிகளை எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்துவது என உணவியல் நிபுணர் நடாஷா மோகன் சமீபத்தில் தனது விரைவான செய்முறையின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும் வீடியோவில், "எனது வாடிக்கையாளர் இதை தினமும் சாப்பிட்டார். 5 நாட்களில் 2 கிலோ எடையை குறைத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் நிறைந்த ஒரு நல்ல சாலட் ஒரு முழுமையான ஆரோக்கியமான உணவாக இருக்கும். மேலும் அது எளிமையாக வயிற்றை நிரப்பி விடும். ஆனால் நடாஷா மோகனின் எடை குறைப்பு போன்றவற்றில் அவர் பரிந்துரைக்கும் சாலட்டை எவ்வாறு உதவுகிறது என இங்கு காணலாம்.