Long Hair : கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Long Hair : கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி மட்டும் போதும்!

Long Hair : கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Published May 29, 2024 08:00 AM IST

Long Hair : கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி என இது இரண்டு மட்டும் இருந்தால் போதும்.

Long Hair : கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி மட்டும் போதும்!
Long Hair : கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமா? அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி மட்டும் போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கருகரு நீண்ட கூந்தல் வேண்டுமெனில், அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த கஞ்சி இரண்டையும் சேர்த்து கூந்தலை அலசினால் போதும். அதுமட்டுமின்றி, கடும் முடி உதிர்வு கூட சரியாகிவிடும். கூந்தல் அடர்த்திக்கும் உதவும்.

கெமிக்கல் நிறைந்த ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது சிலருக்கு கூந்தல் வறண்டு போகும். அவர்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தினால், அது கூந்தலுக்கு நல்ல கன்டிஷனர் ஆகும்.

உப்பு தண்ணீரை பயன்படுத்தும்போதும், ஒரு சிலருக்கு முடி கொட்டும் பிரச்னை ஏற்படும். அவர்களுக்கு இது உதவும். இளநரை உள்ளவர்களுக்கும் இது உதவும். வழுக்கை விழுந்த இடத்திலும் முடியை வளரவைக்கும்.

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு டம்ளர்

வைட்டமின் இ எண்ணெய் – 2

(மெடிக்கலில் கிடைக்கும்)

செய்முறை

நாம் தினமும் சாதம் வடிக்கப் பயன்படுத்தும், அரிசியை வழக்கம்போல் அரை மணி நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரை வடித்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் சாதம் வடித்த தண்ணீரை ஆடைகளை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த இரண்டு தண்ணீரையும் வடித்துக்கொள்ளவேண்டும். கஞ்சி கெட்டியாக இருந்தால், அதை மிக்ஸியில் அடித்து எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டு சமஅளவு எடுத்துக்கொள்ளவேண்டும். உப்பு போட்டு சாதம் வடித்தால் அந்த தண்ணீரை பயன்படுத்தக்கூடாது.

தண்ணீருடன், வைட்டமின் இ எண்ணெயை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை

இந்த தண்ணீரை தேவையான அளவு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவிக்கொள்ளலாம்.

பின்னர் அரை மணிநேரம் ஊறவிட்டு, மிருதுவான ஷாம்பூவைப் பயன்படுத்தி அலசினால் தலையில் உள்ள பொடுகு நீங்கும்.

இந்த தண்ணீரில், நெல்லிக்காய்ப்பொடியை கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவு தடவிவிட்டு அரை மணிநேரம் ஊறவிட்டு, ஷாம்பு பயன்படுத்தினால் இளநரை குறையும்.

வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த டிப்ஸ் பயன்படுத்த வேண்டும். அப்போது முடி உதிர்வும் இருக்காது. தலைமுடிக்கு நல்ல கண்டிஷ்னராக இருக்கும்.

இந்த தண்ணீரில் வைட்டமின் இ எண்ணெயை எடுக்காமல், வெறும் அரிசி கழுவிய தண்ணீரை மட்டும் எடுக்கவேண்டும். நீங்கள் உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக அரிசி கழுவிய தண்ணீரை தலைக்கும் குளித்து முடித்தவுடன் கடைசியாக தலையில் ஊற்றிவிடவேண்டும். பின்னர் ஒரு கப் மட்டும் சாதாரண தண்ணீர் ஊற்றி கழுவிவிடவேண்டும். இது உப்புத்தண்ணீரால் ஏற்படும் கூந்தல் சேதத்தைப் போக்கும்.

தலையில் எண்ணெய் இருந்தால், இந்த தண்ணீரை மட்டும் தடவி முடியின் வேர்க்கால்கள் மற்றும் தலைமுடி முழுவதும் தடவிவிட்டு அரை மணி நேரம் ஊறவிட்டு, மிருதுவான ஷாம்பூ தேய்த்து குளிக்கலாம்.

இந்த தண்ணீரை கொஞ்சம் மட்டும் எடுத்து லைட்டாக வேர்க்கால்களில் தடவிவிட்டு, இரவு முழுவதும் ஊறவிடலாம். இரவு படுக்கச்செல்லும் முன் பயன்படுத்தலாம். ஈரப்பதம் நிறைய இருக்கக்கூடாது என்பதற்காக கொஞ்சம் மட்டுமே தடவிக்கொள்ளவேண்டும்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீர் இரண்டிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நேரடியாக நமது தலைமுடிக்கு நேரடியாகச் செல்லும். நாம் உண்ணும் உணவில் இருந்துகூட நேரடியாகச் செல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் இது கட்டாயம் ஊட்டமளிக்கும். இது எளிதாக வீட்டில் செய்யக்கூடிய முறைதான் எனவே கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.