Liver Detoxification : கல்லீரலை சுத்தம் செய்யவேண்டுமா? இதோ இந்த உணவுகள் மட்டும் போதும்! கட்டாயம் எடுங்கள்!
Liver Detoxification : கல்லீரலை சுத்தம் செய்யவேண்டுமா? இதோ இந்த உணவுகள் மட்டும் போதும். எனவே இவற்றை கட்டாயம் சேர்த்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

உங்கள் கல்லீரலை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் கல்லீரல்தான் உடலின் முக்கியமான உறுப்பாகும். இதுதான் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களை தயாரிக்கிறது மற்றும் செரிமானத்துக்கு உதவுகிறது. கல்லீரல் தானாகவே சுத்தம் செய்துகொள்கிறது. சில உணவுகளும் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகின்றன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்.
பூண்டு
பூண்டில் சல்ஃபர் என்ற ஒரு உட்பொருள் உள்ளது. இது கல்லீரல் என்சைம்களை தூண்டுகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது. பூண்டில் அலிசின் மற்றும் செலினியம் உள்ளது. இவையிரண்டும் சக்திவாய்ந்த உட்பொருள்கள், இது கல்லீரலை சேதம் அடையாமல் காக்கிறது. கழிவுநீக்கத்தில் உதவுகிறது.
பீட்ரூட்
பீட்ரூடில் பீட்டலைன் என்ற உட்பொருள் உள்ளது. அது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவி, கல்லீரலை சுத்தம் செய்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. பீட்ரூட், கல்லீரலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. கல்லீரல் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது.