Liver Detox : உறங்கச் செல்லும் முன் இதை ஒரு ஸ்பூன் எடுக்கவேண்டும்! உங்கள் கல்லீரல் புதிதாகி விடும்!-liver detox take a spoonful of this before going to sleep your liver will regenerate - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Detox : உறங்கச் செல்லும் முன் இதை ஒரு ஸ்பூன் எடுக்கவேண்டும்! உங்கள் கல்லீரல் புதிதாகி விடும்!

Liver Detox : உறங்கச் செல்லும் முன் இதை ஒரு ஸ்பூன் எடுக்கவேண்டும்! உங்கள் கல்லீரல் புதிதாகி விடும்!

Priyadarshini R HT Tamil
Aug 17, 2024 01:03 PM IST

Liver Detox : உறங்கச் செல்லும் முன் இதை ஒரு ஸ்பூன் எடுக்கவேண்டும்! உங்கள் கல்லீரல் புதிதாகி விடும். உடலின் மற்ற பாகங்களிலும் உள்ள கழிவுகளையும் அகற்றிவிடும்.

Liver Detox : உறங்கச் செல்லும் முன் இதை ஒரு ஸ்பூன் எடுக்கவேண்டும்! உங்கள் கல்லீரல் புதிதாகி விடும்!
Liver Detox : உறங்கச் செல்லும் முன் இதை ஒரு ஸ்பூன் எடுக்கவேண்டும்! உங்கள் கல்லீரல் புதிதாகி விடும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

இரவில் உறங்கச் செல்லும் முன் இந்த பானத்தில் வெறும் ஒரு ஸ்பூன் மட்டும் பருகினால் போதும் உங்கள் கல்லீரல் புதிதுபோல் ஆகிவிடும். உங்கள் உடலும் உங்களுக்கு நன்றி சொல்லும். உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யும் கல்லீரலை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – 100 கிராம்

(தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சியில் உள்ள காரத்தன்மை ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு, கல்லீரலை சுத்தப்படுத்தும். உடல் முழுவதையும் சுத்தமாக்கும்)

பூண்டு – 50 கிராம்

(தோல் நீக்கி, இதையும் சிறுசிறு துண்டுகளாக்கிக்கொள்ளவேண்டும். பூண்டும் உங்கள் உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது)

பெரிய வெங்காயம் – 1

(தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

(கல்லீரலை சுத்தம் செய்வதற்கு மிகவும் அவசியம் தேவைப்படுவது மஞ்சள் தூள்)

எலுமிச்சை – 1

செய்முறை

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பெரிய வெங்காயம் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் 400 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பாதி கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூளை சேர்க்கவேண்டும். மஞ்சள் தூளை சேர்த்து அது நன்றாக கொதித்தவுடன், 100 மில்லி லிட்டராக தண்ணீர் குறையவேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பொருட்களின் சாறு தண்ணீரில் நிறைந்திருக்கும்.

அந்த அளவு சுண்டி வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை இறக்கி ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் வடிகட்டி, ஒரு ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் துண்டாக நறுக்கிய எலுமிச்சைகளை சேர்த்து ஊறவிடவேண்டும்.

இந்த பானத்தை காற்றுப்புகாமல் இறுக அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் இரவில் உறங்கச் செல்லும் முன் இதில் ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் பருகிவிட்டு, அரை டம்ளர் சூடான தண்ணீரை பருகிவிட்டு உறங்கிவிடவேண்டும். இது உங்கள் கல்லீரல் மற்றும் உடல் முழுவதையும் நன்றாக சுத்தம் செய்துவிடும்.

இதை நீங்கள் மாதத்தில் ஒரு வாரம், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை செய்தால்போதும். உங்கள் கல்லீரல் புதிது போல் மாறிவிடும். உங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை தரும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.