Liver Detox : மூன்றே நாளில் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கும் ஜூஸ்; காலை, மாலை இருவேளையும் பருக பலன் உறுதி!-liver detox juice that cleanses your liver in just three days drink it both in the morning and in the evening for sure - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Detox : மூன்றே நாளில் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கும் ஜூஸ்; காலை, மாலை இருவேளையும் பருக பலன் உறுதி!

Liver Detox : மூன்றே நாளில் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கும் ஜூஸ்; காலை, மாலை இருவேளையும் பருக பலன் உறுதி!

Priyadarshini R HT Tamil
Aug 20, 2024 09:34 AM IST

Liver Detox : மூன்றே நாளில் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கும் ஜூஸ், காலை, மாலை இருவேளையும் பருக பலன் உறுதி. இதை கட்டாயம் செய்து பலன்பெறுங்கள்.

Liver Detox : மூன்றே நாளில் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கும் ஜூஸ்; காலை, மாலை இருவேளையும் பருக பலன் உறுதி!
Liver Detox : மூன்றே நாளில் உங்கள் கல்லீரலை சுத்தமாக்கும் ஜூஸ்; காலை, மாலை இருவேளையும் பருக பலன் உறுதி!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கல்லீரல் ஆரோக்கியம்

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். ஆனால் இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றைதான் மருத்துவ உலகம் முக்கியமான உறுப்பாக கூறும்.

ஆனால், கல்லீரல்தான் உண்மையில் நமது உடலின் முக்கிய பாகம். அது உடலில் பல்வேறு வேலைகளை செய்து நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.

நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1 (தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)

இதில் கல்லீரலை சுத்தப்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி, சி உள்ளது. எண்ணற்ற இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியச்சத்துக்கள் உள்ளன. காப்பர் போன்ற மினரல்களும் உள்ளன.

கேரட் – 2 (சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

கேரட்டில் வைட்டமின் ஏ, பி, சி, கே ஆகியவை உள்ளன. இதில் அதிகளவில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியச் சத்துக்கள் உள்ளன. செலினியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள ஃபைட்டோ நியூட்டிரியன்ட்கள் கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

இஞ்சி – ஒரு இன்ச் (தோல் சீவி நறுக்கிக்கொள்ளவேண்டும்)

எலுமிச்சை சாறு – ஒரு பழத்தின் சாறை பிழிந்துகொள்ளவேண்டும்.

மல்லித்தழை – சிறிது

செய்முறை

பீட்ரூட், கேரட், இஞ்சி, எலுமிச்சை சாறு, மல்லித்தழை என அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கால்லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

அதை வடித்து, தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் மூன்று முதல் ஒரு வாரம் வரை பருகவேண்டும் அல்லது மாதத்தில் மூன்று நாட்கள் பருகவேண்டும். அப்படி செய்தால் உங்கள் கல்லீரல் சுத்தமாகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.