தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Cancer : ஈரல் புற்றுநோயை விரட்டியடிக்கும் மருத்துவ மூலிகை! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Liver Cancer : ஈரல் புற்றுநோயை விரட்டியடிக்கும் மருத்துவ மூலிகை! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Priyadarshini R HT Tamil
Jun 16, 2024 07:00 AM IST

Liver Cancer : ஈரல் புற்றுநோயை விரட்டியடிக்கும் மருத்துவ மூலிகைச் செடியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

Liver Cancer : ஈரல் புற்றுநோயை விரட்டியடிக்கும் மருத்துவ மூலிகை! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
Liver Cancer : ஈரல் புற்றுநோயை விரட்டியடிக்கும் மருத்துவ மூலிகை! ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் என்பது உடலில் சில செல்கள் தடுக்க முடியாமல் வளர்ந்து, உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுவது ஆகும்.

புற்றுநோய் உடலின் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் தோன்றலாம். அது டிரில்லியன் அளவுகள் கணக்கில் வளரும். வழக்கமாக மனித செல்கள் வளர்ந்து பல்கிப்பெருகி புதிய செல்களை உருவாக்கும். உடலுக்கு அவை தேவை. செல்கள் பழசானவுடனோ அல்லது சேதமடைந்தவுடனோ அவை அழிந்துவிடும். அந்த இடத்தில் புதிய செல்கள் தோன்றும்.

சில நேரங்களில் இந்த வழக்கமான நிகழ்வில் பிளவு ஏற்பட்டு, சேதமடைந்த செல்கள் பல்கிப்பெருகும். இந்த செல்கள் கட்டிகளை உருவாக்கும். இவை திசுக்களின் கட்டியாகும். இவை புற்றுநோயாக மாறலாம் அல்லது மாறாமல் கூட போகலாம்.

இந்த புற்றுநோய் கட்டிகள் அருகில் உள்ள திசுக்களுக்கும் பரவலாம் மற்றும் உடலில் தொலைவில் உள்ள இடங்களுக்கும் சென்று புதிய கட்டிகளை உருவாக்கலாம். 

பெரும்பாலான புற்றுநோய்கள் கட்டிகளாக இருக்கின்றன. ஆனால், லியுகேமியா எனப்படும் ரத்த புற்றுநோய் கட்டிகளாவதில்லை.

கீங்கிழைக்காத கட்டிகள் அருகில் உள்ள திசுக்களுக்கு பரவுவதில்லை. அவற்றை அகற்றிவிட்டால் போதும். அவை மீண்டும் வராது. ஆனால் புற்றுநோய் கட்டிகளை அகற்றினாலும் மீண்டும் வரும். 

தீங்கிழைக்காத கட்டிகள் சில நேரங்களில் பெரிதாக இருக்கலாம். எனினும், அவற்றில் சில வனை கடும் உடல் உபாதைகள் அல்லது உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக அவை மூளையில் ஏற்படும்போது அவ்வாறு ஆகலாம்.

ஆய்வு

University of Madras and TN Open University நிபுணர்கள் செய்த ஆய்வில், சிறு செறுப்படை இலைகள் (Coldenia procumbens) தமிழக கிராமங்களில் பரவலாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்பட்டு வரும் நிலையில் (குறிப்பாக மூட்டுவாத நோய்களுக்கு) அந்த இலைகளுக்கு புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதாக ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக அதை பயன்படுத்த முடியும்.

சிறு செறுப்படை இலைகளின் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை உறுதிபடுத்த 2018ம் ஆண்டு நிபுணர்கள் சிலர் ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டனர்.

அதற்காக, விழுப்புரம் மாவட்டம், ஓட்டேரிபாளையத்தில் உள்ள உலர் அரிசி விளையும் நிலத்தில் சிறுசெறுப்படை உலர் இலைகளை சேகரித்து, தாவரத்தின் பெயரை தாவரவியல் நிபுணர் உதவியுடன் (மறைந்த ஜெயராமன்-Plant Anatomical Research Institute-Tambaram) உறுதிசெய்தனர்.

DNA fragmentation, invitro Cancer Activity போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, சிறு செறுப்படை இலைகள் ஈரல் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் பானுப்பிரியா, ரவிச்சந்திரன் மற்றும் குழுவினர் செய்த இந்த ஆய்வு,"Appliied Bio-Chemistry and Biotechnology"ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

நம் முன்னோர்கள் பல மூலிகைகளை உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தி தொன்றுதொட்டே பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சளிக்கு துளசி, தூதுவளை, மூட்டு வலிக்கு முடக்கத்தான் என்பது நாம் நன்றாக அறிந்ததும், அன்றாடம் பயன்படுத்தக்கூடியதும் ஆகும். 

இதுபோல் எண்ணற்ற மூலிகைகள் உள்ளன. ஆனால் சில மூலிகைகள் குறித்து நமக்கு அத்தனை பரிட்சயம் இருக்காது. ஆனால் அவையும் நமக்கு உதவக்கூடியவைதான் என்பதை இதுபோன்ற ஆராய்ச்சிகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன.

மூலிகை மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் போன்றவற்றை அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக பார்க்காமல் அவற்றில் உள்ள சிறப்பு அம்சங்களை உணர்ந்து, அவற்றையும் மக்கள் நலனுக்காக பயன்படுத்த அரசும், அறிவியல் உலகமும் மக்களும் இந்த அறிவியல் ஆய்விற்கு பின்னாவது தயக்கமின்றி முன்வர வேண்டும்.

நன்றி - மருத்துவர். புகழேந்தி. 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.