South Indian Breakfast: தென்னிந்தியாவின் டாப் பிரேக்பாஸ்ட் என்னனு தெரியுமா? குறைந்த கலோரி! நிறைந்த சுவை!
South Indian Breakfast: நாம் காலங்காலமாக சாப்பிட்டு வரும் உணவுகளே சிறந்தவை தான். தென்னிந்திய பகுதிகளில் காலை வேளையில் சாப்பிடும் உணவுகள் குறைந்த கலோரி கொண்டவையாகவும் உள்ளன.

உலக அளவில் சுகாதார செயல்முறைகள் மாறி வருகின்றன. உடலின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அதில் முதன்மையான ஒன்றாக உணவு முறை உள்ளது. ஒருவரின் உணவுப் பழக்கமே அவரது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. தமிழில் கூட “உணவே மருந்து” என்ற ஒரு கருத்து உள்ளது. எனவே சீரான உணவு தான் உடலின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். ஆனால் தற்போது மேலை நாட்டு உணவு முறைகளை பின்பற்றும் பழக்கமும் நம் நாட்டு மக்களுக்கு அதிகரித்து வருகிறது. உதாரணத்திற்கு நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து புது விதமான உணவு பழக்கத்திற்கு மாறி வருகிறோம். ஆனால் நாம் காலங்காலமாக சாப்பிட்டு வரும் உணவுகளே சிறந்தவை தான். தென்னிந்திய பகுதிகளில் காலை வேளையில் சாப்பிடும் உணவுகள் குறைந்த கலோரி கொண்டவையாகவும் உள்ளன.
இட்லி
இட்லி என்பது மிகவும் சத்தான ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு உணவாகும். சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படும் இந்த மென்மையான, லேசான, பஞ்சுபோன்ற இட்லிகள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவாகும். மேலும் அவை தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் சாப்பிடப்படுகிறது. ஒரு நபருக்கு தேவையான இட்லியில் ஏறத்தாழ 120 முதல் 140 வரை மட்டும் கலோரிகள் உள்ளன.
தோசை
இந்த மொறுமொறுப்பான, பட்டுப்போன்ற பான்கேக், சாம்பார் மற்றும் சட்னிகளுடன் பரிமாறப்படும் அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் அதிகம், ஆனால் இதில் சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. ஒரு பிளைன் தோசையில் சுமார் 168 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது.